Home /News /tamil-nadu /

மதுபோதையில் 10 வயது சிறுமியை வாயை கட்டி தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை - இளைஞர் மீது குண்டாஸ்...

மதுபோதையில் 10 வயது சிறுமியை வாயை கட்டி தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை - இளைஞர் மீது குண்டாஸ்...

இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

Sexual harassment : சிறுமி அலறல் சத்தம் போட்டுக்கொண்டு வீட்டை நோக்கி ஓடி வந்து தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சேத்தபாவை தேடிச் சென்ற பொழுது அந்த இடத்திலிருந்து சேத்தப்பா தப்பிச் சென்றுள்ளான்.

மேலும் படிக்கவும் ...
    மதுபோதையில் 10 வயது சிறுமியை வாயை கட்டி தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

    திருவாரூர் அருகே ஐந்தாம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி தனது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த பொழுது அடியக்கமங்கலம் புது காலனி தெருவைச் சேர்ந்த சேத்தப்பா என்கிற நபர் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி சிறுமியை வாயை கட்டி தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    பின்னர் சிறுமி அலறல் சத்தம் போட்டுக்கொண்டு வீட்டை நோக்கி ஓடி வந்து தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சேத்தபாவை தேடிச் சென்ற பொழுது அந்த இடத்திலிருந்து சேத்தப்பா தப்பிச் சென்றுள்ளான். இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒரு வாரத்திற்கு பின்னர் வீடு திரும்பினார்.

    இதையும் படியுங்கள் : கண்டித்த ஆசிரியரை சினிமா பாணியில் ஆட்களை கூட்டிவந்து மிரட்டிய மாணவன்.. பாதுகாப்பு கோரி ஆசிரியர் போலீசில் புகார்..

    மேலும் இந்த சம்பவம் குறித்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சேத்தப்பாவை திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்து அவர் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகப்பட்டினம் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் சேத்தப்பா தனியார் கேட்டரிங் சர்வீஸில் பணிபுரிந்து வருவதாகவும். மதுபோதையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

    குழந்தையை சீரழித்த மதுபோதை இளைஞர்


    இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பெயரில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின் பேரில் சேத்தப்பாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நாகப்பட்டினம் கிளை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் மேலும் இதே போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    செய்தியாளர் : செந்தில்குமரன், திருவாரூர்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Sexually harassed women, Sexually harassing, Sexually harrassed, Thiruvarur

    அடுத்த செய்தி