வாக்காளர்கள் அனைவரும் வாக்கு அளிக்க வலியுறுத்தி முள் மீது அமர்ந்து பத்மாசனம், பர்வதாசனம், சாந்தியாசனம், சுகாசனம் செய்து வாக்கு அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள கிரியா பாபா ஆசிரமத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பொது மக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 22 வயது இளைஞர் முள் மீது அமர்ந்து பல்வேறு யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
சத்குரு ஓம்கார சிவதாச பகவான்
வாக்காளர்கள் அனைவரும் எதற்காக வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்குரிமை உள்ளவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி யோகாசனம் செய்தார். யோகாசனம் செய்தால் உடலுக்கு நன்மை தருவது போல் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்கு அளித்தால் நாட்டிற்கு எத்தகைய நன்மைகள் கிடைக்கும் என்பதை வலியுறுத்தி முள் மீது அமர்ந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை
சத்குரு ஓம்கார சிவதாச பகவான் என்ற 22 வயது இளைஞர் முள் மீது அமர்ந்து பத்மாசனம், பர்வசாதனம், சாந்தியாசனம் மற்றும் சுகாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனம் செய்து 100 சதவீதம் வாக்கு அளிக்க வலியுறுத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.