பழங்குடியினர் என்பதால் ஊராட்சி மன்ற தலைவரை சவக்குழி தோண்ட வைத்த நிகழ்வு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, வறுமையில் வாடும் பழங்குடி சமூக ஊராட்சி மன்றத் தலைவரை சவக்குழி தோண்ட வைத்த கொடுமை நிகழ்ந்துள்ளது

பழங்குடியினர் என்பதால் ஊராட்சி மன்ற தலைவரை சவக்குழி தோண்ட வைத்த நிகழ்வு
News 18
  • News18
  • Last Updated: June 4, 2020, 6:15 PM IST
  • Share this:
திருவண்ணாமலை மாவட்டம் அரியாகுஞ்சூர் ஊராட்சி மன்றத் தலைவராக, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆறு பிள்ளைகளுடன் சிறிய வீட்டில் வசித்து வரும் அவர், விறகு வெட்டி அதில் கிடைக்கும் வருமானத்திலே தனது குடும்பத்தை இன்றும் காப்பாற்றி வருகிறார்.

இந்தநிலையில், ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோதும் ஊர் மக்களுக்கு தன்னால் நன்மை செய்யமுடியவில்லை எனக் கூறும் முருகேசன், துணைத் தலைவர் சிவானந்தம், வார்டு உறுப்பினர் செல்வம் ஆகியோர் பணிசெய்ய விடாமல் தடுப்பதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.

அரசு மூலம் கிடைக்கும் வேலைகளை ஏற்கனவே செய்துவிட்டதாக கூறி தன்னிடம் கையெழுத்து வாங்குவதாகவும், இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டுவதாகவும் முருகேசன் கூறியுள்ளார். இதற்கு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற செயலாளர் சுரேஷ்குமாரும் துணைபோவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.


இந்தச் சூழலில்தான், இரு தினங்களுக்கு முன், அப்பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்த நிலையில், அவரது சவக்குழியை தோண்ட வைத்து அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கலங்குகிறார் முருகேசன்.

குடும்ப வறுமையை காரணம் காட்டி தன்னை துன்புறுத்தும் நிலையில், இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என முருகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


First published: June 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading