சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஒரு மணி நேரத்திற்கு 20 முதல் 50 பேருந்துகள் இயக்கம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் அமர்வு தரிசனம், விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்தார்

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஒரு மணி நேரத்திற்கு 20 முதல் 50 பேருந்துகள் இயக்கம்!
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் அமர்வு தரிசனம், விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்தார்
  • News18
  • Last Updated: April 18, 2019, 8:56 PM IST
  • Share this:
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 2 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு 20 முதல் 50 பேருந்துகள் என நாளை மாலை வரை இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்தது

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

இன்று (18-04-2019) நடைபெற்ற பொதுத் தேர்தல், சித்ரா பௌர்ணமி, மதுரையில் சித்திரை திருவிழா மற்றும் புனித வெள்ளி ஆகிய பண்டிகை நாட்களை முன்னிட்டு கடந்த 17.04.2019 முதல் 21.04.2019 வரை ஆகிய 5 நாட்களுக்கு தொடர் அரசு விடுமுறை நாட்களாகும்.


இதனை முன்னிட்டு பொது மக்கள் ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக போக்குவரத்துத் துறையின் சார்பில் கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த 16.04.2019 அன்று கோயம்பேட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அட்டவணைப்படி இயக்கப்பட்ட 2950 பேருந்துகள் தவிர, கூடுதலாக 850 பேருந்துகள் இயக்கப்பட்டன. (17.04.2019) நேற்றைய தினத்திலிருந்து கூடுதலாக 1510 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று (18.04.2019) பொதுமக்கள் சென்னைக்கு அருகாமையில் உள்ள ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாகவும், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு செல்லும் பொருட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எதிர்பாராத விதமாக மக்கள் கூட்டம் அலைமோதியதையடுத்து கூட்டத்தை சமாளிக்க போக்குவரத்துத் துறையினர் மேலும் கூடுதலாக பேருந்துகளை இயக்க திட்டமிட்டனர்.இதன் அடிப்படையில், குறிப்பாக சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 2 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு 20 முதல் 50 பேருந்துகள் என நாளை மாலை வரை இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்தது

இந்நிலையில், திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியையொட்டி  பக்தர்களுக்கு பாதுகாப்புக்காக 2 SP, 3 ADSP, 16 DSP உட்பட 1700 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், 22 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கிரிவலப் பாதையிலும், கோவிலிலும், நகரிலும், 289 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி தெரிவித்தார்.

மேலும், ஆளில்லா விமானம் மூலம் பாதுகாப்பு பணிகளை கண்காணிக்கும் பணியும் செய்யப்பட்டுள்ளது என சிபி சக்ரவர்த்தி தெரிவித்தார்.

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் அமர்வு தரிசனம்,  விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பேட்டியளித்தார்.

Watch Also:
தேர்தலுக்கு பிறகு நல்ல விடிவு காலம் பிறக்கும் – நடிகர் வடிவேலு


வேலூர் தேர்தல் ரத்து: கண்ணீர் விட்டு அழுத ஏ.சி.சண்முகம்
First published: April 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading