கோயில் நகரமான திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி கடந்த 2009-ம் ஆண்டு முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது.
முன்னதாக திருப்பத்தூர் மக்களவைத் தொகுதியாக விளங்கி வந்தது. 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட மறுசீரமைப்பின் போது, திருப்பத்தூர் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, அதிலிருந்த சில தொகுதிகளையும் வந்தவாசியில் இருந்து சில தொகுதிகளையும் இணைத்து திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க-வின் த. வேணுகோபால் 4,73,866 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் வனரோஜா 5,00,751 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து தி.மு.க சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரை என்பவர் 3,33,145 வாக்குகளையும் பா.ம.க-வின் எதிரொலி மணியன் 1,57,954 வாக்குகளையும் காங்கிரஸின் ஏ.சுப்ரமணியம் 17,854 வாக்குகளையும் பெற்று தோல்வி அடைந்தனர்.
15-வது மக்களவைத் தேர்தலில் 79.89% வாக்குகள் பதிவான திருவண்ணாமலை தொகுதியில் 16-வது மக்களவைத் தேர்தலில் 78.08% வாக்குகள் மட்டுமே பதிவாகின. மற்ற தொகுதிகளில் ஏறுமுகத்தில் இருந்த வாக்குப்பதிவு சதவீதம் திருவண்ணாமலை தொகுதியில் நேர்மாறாக -1.09% என சரிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Rahini M
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.