இன்ஸ்டாகிராமில் வேறு நபரின் போட்டோவை பயன்படுத்தி மோசடி - 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு காதல் வலை வீசி பணம் பறிப்பு
இன்ஸ்டாகிராமில் வேறு நபரின் போட்டோவை பயன்படுத்தி மோசடி - 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு காதல் வலை வீசி பணம் பறிப்பு
பயாஸ்
Thiruvannamalai Crime News | ஆரணி டவுன் அருணகிரிசத்திரத்தை சேர்ந்த 24 வயதான பயாஸ், இன்ஸ்டாகிராமில் வேறு நபரின் புகைப்படத்தை வைத்து இளம்பெண்களுக்கு காதல் வலை வீசியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இன்ஸ்டாகிராமில் வேறு நபர்களின் புகைப்படத்தை பயன்படுத்தி, 100-க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழவைத்து, லட்சக்கணக்கில் பணம் பறித்த இளைஞர், கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரணி டவுன் அருணகிரிசத்திரத்தை சேர்ந்த 24 வயதான பயாஸ், இன்ஸ்டாகிராமில் வேறு நபரின் புகைப்படத்தை வைத்து இளம்பெண்களுக்கு காதல் வலை வீசியுள்ளார்.
இதில், பையூர் கிராமத்தை சேர்ந்த ஒருவரின் புகைப்படத்தை பயாஸ் பயன்படுத்தி, பெண்களிடம் பணம் பறித்ததை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர், பெண் போன்று குறுஞ்செய்தி அனுப்பி, ஆரணி கோட்டை மைதானத்திற்கு வரவழைத்து பயாஸை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில் திருமணமான பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோரை பயாஸ் ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து பயாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போளுர் கிளை சிறையில் அடைத்தனர்.
-செய்தியாளர்: ம.மோகன்ராஜ்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.