‘இந்த குடியால எங்க குடியே கெடுது’ - வந்தவாசியில் மதுக்கடையை மூட வலியுறுத்தி பெண்கள் முற்றுகை

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்

ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறுவதில்லை என்றும், தங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் தினமும் குடித்துவிட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினர்.

 • Share this:
  வந்தவாசியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்களை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்துள்ள பாதிரி கிராமத்தில் டாஸ்மாக் மது கடை இயங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக, டாஸ்மாக் மதுக் கடைகள் கடந்த ஒரு மாதமாக மூடியிருந்த நிலையில், இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

  இந்நிலையில், பாதிரி கிராமத்தில் உள்ள மதுக்கடையை திறந்த உடன், அப்பகுதி பெண்கள் உட்பட பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கடையை மூட வலியுறுத்தினர்.இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்


  அப்போது, தாங்கள் கடந்த சில ஆண்டுகளாக போராட்டம் நடத்தி, இந்த கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி வருவதாகவும், ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறுவதில்லை என்றும், இந்த மதுக்கடைகளால் தங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் தினமும் குடித்துவிட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினர். ஊரில் இருக்கும் இந்த மதுக்கடையை உடனடியாக மூடாவிட்டால், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.

  Also Read: மது அருந்துபவர்களை தீயவர்கள் என்று கூறமுடியாது; சில இடங்களில் பெண்கள் கூட மது அருந்துகின்றனர்: ப.சிதம்பரம்

  அதேசமயம், பாதிரி கிராமத்தில் சிலர் கொரோனா பாதிப்பில் இருப்பதாகவும், சில தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த பகுதியில் மதுகடையை திறந்து வைத்திருப்பது கொரோனா பரவலுக்கு வழிவகுத்துவிடும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
  எனவே மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றனர். மேலும் கைகளில் பதாகைகளை பிடித்துக் கொண்டு மதுபானக் கடைக்கு எதிராக முழக்கமிட்டனர்.

  இதுகுறித்து தகலவறிந்த தாசில்தார் திருநாவுக்கரசு, டி.எஸ்.பி. தங்கராமன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அவர்கள் டாஸ்மாக் கடையை மூடுவது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.
  Published by:Ramprasath H
  First published: