• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அத்துமீறிய கொழுந்தன்... அரிவளால் சராமாரியாக வெட்டிக் கொன்ற அண்ணி

அத்துமீறிய கொழுந்தன்... அரிவளால் சராமாரியாக வெட்டிக் கொன்ற அண்ணி

Youtube Video

செங்கம் அருகே தன்னிடம் தவறாக நடக்க முயன்ற கணவரின் தம்பியை. அண்ணி சராமாரியாக வெட்டி கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  • Share this:
    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் தளவநாயக்கன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் 50 வயதான செல்வம். லாரி ஓட்டுநரான இவருக்கு பராசக்தி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். செல்வம் லாரி ஓட்டுநர் என்பதால் மாதக் கணக்கில் வீட்டிற்கு வராமல் வெளி மாநிலங்களுக்கு சென்று விடுவார். இதனால் அவரது மனைவி பராசக்தி குழந்தைகளுடன் தனியாக வசிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதனைப் பயன்படுத்திக் கொண்ட செல்வத்தின் தம்பியான 47 வயதான ராஜா என்பவர் அடிக்கடி தனது அண்ணி பராசக்திக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். ஏற்கெனவே திருமணமான ராஜா மதுபோதைக்கு அடிமையானவர் என்பதால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் ராஜா தனது அண்ணியிடம் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    Also Read : யூடியூப் டான் என பில்டப் கொடுத்த பப்ஜி மதன் - தருமபுரியில் சிக்கியது எப்படி?

    மேலும் அண்ணியின் மகள்களான சிறுமிகளிடமும் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை லாரி ஓட்டுவதற்காக செல்வம் வெளியூர் சென்றிருந்த போது வீட்டிற்கு வந்த ராஜா, குடிபோதையில் பராசக்தியிடம் தரக்குறைவாக பேசியுள்ளார். மேலும், அவரது பெண் குழந்தைகள் குறித்தும் அவதூறாக பேசி அத்துமீறவும் முயன்றுள்ளார். அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வலுத்துள்ளது.

    இதனால், ஆத்திரமடைந்த பராசக்தி அன்று இரவு போதையில் ராஜா உறங்கிக் கொண்டிருந்த போது, விட்டிலிருந்த கொடுவாளை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ராஜா உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி செங்கம் அரசு மருத்தவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    Also Read : சிவசங்கர் பாபா குறித்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்..

    போலீசார் விசாரணையில் பராசக்தி கொலை செய்தது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தன்னிடம் தவறாக நடக்க முயன்ற கணவரின் தம்பியை அண்ணி வெட்டி கொன்ற சம்பவம் செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: