ஆரணி அருகே அரசமரத்திற்கும் - வேப்பமரத்திற்கும் திருமணம் செய்து வழிபட்ட கிராம மக்கள்!

ஆரணி அருகே அரசமரத்திற்கும் - வேப்பமரத்திற்கும் திருமணம் செய்து வழிபட்ட கிராம மக்கள்!

அரசமரத்திற்கும் - வேப்பமரத்திற்கும் திருமணம்

ஆரணி அருகே மரங்களில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி அதிகாரிக்கும் வகையில் மரங்களை வளர்த்து மனிதனை பாதுகாக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்றில் இருந்து விடுபட கோரியும், அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் நூதன முறையில் திருமணம் செய்து கிராம மக்கள் வழிப்பட்டனர்.

 • Share this:
  ஆரணி அருகே மரங்களில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி அதிகாரிக்கும் வகையில் மரங்களை வளர்த்து மனிதனை பாதுகாக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்றில் இருந்து விடுபட கோரியும், அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் நூதன முறையில் திருமணம் செய்து கிராம மக்கள் வழிப்பட்டனர்.

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள நரியம்பேட்டை கிராமத்தில் பழமைவாய்ந்த ஆலயமான ஸ்ரீ தஞ்சியம்மன் ஆலயம் உள்ளது. கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தின் சார்பில் ஆலயம் கட்டும் பணி நடைபெற்றது.

  மேலும் அப்போது பல்வேறு மரங்களை அகற்ற முயன்ற போது ஓரு பெண் மீது அருள்வாக்கு வந்து சாமியபடி வேப்பமரம் மற்றும் அரசு மரம் ஆகிய இரண்டு மரங்களை ஓன்றாக வளர்ந்து வருவதை அகற்றபடாமல், அதனை பாதுகாக்க வேண்டும் என்றும் இந்த அரச மரம் உலகம் காக்கும் சிவன் என்றும் வேப்பம் மரம் சக்தி என்று அருள்வாக்கில் கூறியதாக கிராம பொதுமக்கள் தெரிவித்தனர்.

  மேலும் கடந்த 10ஆண்டுகளாக சேர்ந்து வளர்ந்த மரங்களில்  ஒன்றான அரசமரத்தில் பூக்கள் பூத்து குலுங்கி காட்சியளித்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் இந்த இடத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்த அதே பெண் மீது மீண்டும் சாமி வந்தது. அப்போது, அருள்வாக்கில் வேப்பமரம் அரச மரம் ஆகிய இரண்டு மரத்திற்கும் திருமண செய்து வைக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகின்றன.

  இதையடுத்து, கிராம பொதுமக்கள் ஒன்றிணைந்து இரண்டு மரங்களுக்கும் திருமண ஏற்பாடு செய்தனர். முறையாக திருமண பத்திரிக்கை அடித்து அதனை கிராம மக்களுக்கு அனைவருக்கும் வழங்கி அழைப்பு விடுத்ததனர்.

  பின்னர் ஆலய வளாகத்தில் வாழை மரத்தை கட்டியும், அரசானை பந்தல்கால் நட்டும், இரண்டு மரங்களையும் அலங்கரித்து பட்டு புடவையை அணிவித்து மேளதாளம் முழுங்க சீர்வரிசைகள் கிராமத்திலிருந்து ஊர்லவமாக கொண்டு வந்தனர்.

  மேலும் வேதவித்தகர்களால் மந்திரங்ளை ஓதி தாம்பூலம் மாற்றி தங்கத்தினால் ஆன தாலியை (மாங்கல்யம் ) வேப்பமரத்தில் கட்டி இரண்டு மரங்களுக்கும் மகா தீபாரதனை நடைபெற்றது.

  முன்னதாக ஏற்கனவே அமைத்திருந்த யாகசாலையில் வைத்து பூஜித்த புனித நீரை இரண்டு மரங்கள் மீது ஊற்றி திருகல்யாணம் வைபோகம் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் கிராம பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

  மேலும், உலக ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மரங்களை வளர்த்து மனிதனை பாதுகாக்க வேண்டியும்,  உலக அமைதி வேண்டியும் வேப்பமரம் அரசமரம் அலங்கரித்து புத்தாடை அணிவித்து நூதன முறையில் கிராம பொதுமக்கள் திருமணம் செய்த சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

  செய்தியாளர் - மோகன்ராஜ்
  Published by:Esakki Raja
  First published: