ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரங்கள்... நஷ்டஈடு கேட்டு விவசாயிகள் போராட்டம்

விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரங்கள்... நஷ்டஈடு கேட்டு விவசாயிகள் போராட்டம்

விவாசய நிலத்தில் உயர்மின் கோபுரங்கள்... நஷ்டஈடு கேட்டு விவசாயிகள் போராட்டம்

விவாசய நிலத்தில் உயர்மின் கோபுரங்கள்... நஷ்டஈடு கேட்டு விவசாயிகள் போராட்டம்

Vandavasi Farmers Protest | திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உரிய நஷ்டஈடு வழங்கக் கோரி உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி விவசாயிகள் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த பாஞ்சரை கூட்டுச் சாலையில், விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைத்ததற்காக விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு  போராட்டம் சனிக்கிழமை முதல் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இதையொட்டி அங்கேயே சமைத்து உணவருந்தி போராட்டம்  நடத்திய விவசாயிகள், அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால் நேற்று இரவும் போராட்டத்தை தொடர்ந்தனர். விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், இன்று காலையும் போராட்டத்தை தொடர்ந்தனர்..

வந்தவாசி வட்டாட்சியர் முருகானந்தம் மற்றும் போலீஸார் விவசாயிகளை சமரசம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி  அடைந்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அருகிலிருந்த உயர்மின் கோபுரம் மீது ஏறத் தொடங்கினர்.

Also read : ரூ.12 லட்சம் கடனுக்கு ரூ.68 கட்ட சொல்லி விவசாயி சொத்து அபகரிப்பு... எஸ்பிஐ வங்கியை கண்டித்து விவசாயிகள் ஆர்பாட்டம்

இதையடுது்து போலீஸார் ஓடிச் சென்று அவர்களை தடுக்க முயன்றும் முடியவில்லை. விறுவிறுவென  உயர்மின் கோபுரம் மீது சங்க கொடியுடன் ஏறிய சுமார் 6 பேர்,  விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அதிகாரிகள் சமரசம் செய்ததையடுத்து போராட்டத்தினர் உயர்மின் கோபுரம் மீதிருந்து இறங்கினர். பின்னர் மீண்டும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

செய்தியாளர் :  மோகன்ராஜ், ஆரணி

Published by:Vijay R
First published:

Tags: Tiruvanamalai