ஆரணியில் தாய், மகன் மரணத்தில் புதிய திருப்பம்; 8 மாதத்திற்கு பின்னர் செல்போனால் சிக்கிய கொலையாளிகள்!

மாதிரிப்படம்

பிரேம்குமார் உபயோகித்த செல்போன் உபயோகத்தில் இருந்த காரணத்தினால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை துரிதபடுத்தினார்கள்.

  • Share this:
    ஆரணி அருகே தாய் மகன் மரணத்தில் புதிய திருப்பம், கொடுத்த கடனை திரும்ப கேட்டு தொந்தரவு செய்ததால், தாய் மகனை கொன்ற 3 பேரை 8 மாதத்திற்கு பிறகு ஆரணி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள வடமாதிமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியில் கடந்த நவம்பர் மாதம் தலையில் காயத்துடன் மூதாட்டி சடலம் கண்டெடுக்கபட்டது. இதன் பின்னர் ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைத்து; போலீசார் மூதாட்டியின் சடலத்தை படம் பிடித்து மூதாட்டியின் படத்தை அனைத்து காவல்நிலையத்திற்கும் அனுப்பி வைத்தனர். மேலும் மூதாட்டி யார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது சென்னை பிராட்வே பகுதியில் முத்தியால்பேட்டையில் காவல்நிலையத்தில் மூதாட்டி காணவில்லை என்று புகார் அளிக்கபட்டன. அதன் பின்னர் ஆரணி தனிப்படை போலீசார் சென்னை விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
    மேலும் அப்போது இறந்த மூதாட்டியின் பெயர் லட்சுமி (63) இவருக்கு பிரேம்குமார் (32) என்ற மகன் உள்ளதும் தெரிய வந்தது.

    மூதாட்டி லட்சுமி சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் காய்கறி கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். ஆனால் கடந்த நவம்பர் மாதம் மூதாட்டி மற்றும் மகன் பிரேம்குமார் ஆகியோர் காணமல் போய்விட்டனர் என்று உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் பிரேம்குமாரின் செல்போனை நம்பரை வைத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் மேற்கொண்டனர். மேலும் அப்போது பிரேம்குமார் உபயோகித்த செல்போன் உபயோகத்தில் இருந்த காரணத்தினால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை துரிதபடுத்தினார்கள்.

    இதில் மூதாட்டி லட்சுமி தன்னுடைய கடையை விற்க சென்னை புரியதோப்பு பகுதியை சேர்ந்த புரோக்கர் ஆறுமுகம் (எ ) ராமதாஸ் என்பரை அணுகி உள்ளனர். காய்கறி கடையை சுமார் 17 லட்சம் ரூபாய்க்கு சென்னையை சேர்ந்த முரளி என்பவரிடம் விற்றுள்ளனர்.
    இதில் வந்த பணத்தில் ஆறுமுகம் என்பவர் லட்சுமியம்மாளிடம் 7லட்சம் கடனாக பெற்றுள்ளார்.

    மேலும் இதனால் மூதாட்டி லட்சுமியம்மாள் மகன் பிரேம்குமார் ஆகியோர் புளியதோப்பு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை தொடர்ந்து தொந்தரவு செய்து கடனை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.  இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தன்னுடைய நண்பர்களான தமிழ்செல்வன் பாரதி ஆறுமுகம் ஆகியோர் துணையுடன் மூதாட்டி மகன் பிரேம்குமார் என்பவரை மது அதிகமாக குடிக்க வைத்து கழுத்தை கயிற்றால் கட்டி பிரேம்குமாரின் சொந்த கிராமமான விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள கீழ்சேவூர் என்ற கிராமத்தில் கிணற்றில் தள்ளி பிரேம்குமாரை கொலை செய்துள்ளனர்.

    மேலும் மூதாட்டி லட்சுமியிடம் தங்கள் மகன் பிரேம்குமார் ஓரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ய ஆரணி அருகே உள்ள கிராமத்தில் தங்கியுள்ளான் என்று மூதாட்டியிடம் கூறி அழைத்து வந்து ஆரணி அருகே உள்ள வடமாதிமங்கலம் ஏரிகரை அருகில் மூதாட்டியை கழுத்து நெறித்து கொலை செய்து ஏரிகரையில் வீசி எரிந்தது தெரியவந்தது.

    இந்த 2கொலை வழக்கு சம்மந்தகமாக களம்பூர் மற்றும் பிரம்மதேசம் ஆகிய காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டதில் ஏற்கனவே பிரம்மதேசம் காவல்நிலையத்தில் ராஜீ என்பவர் கைது செய்யபட்டு அதன் விசாரணையில் சென்னை புளியதோப்பு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (எ ) ராமதாஸ் தமிழ்செல்வன் பாரதி ஆகிய 3பேரையும் ஆரணி தனிப்படை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    கடனை திருப்பி கேட்ட காரணத்தினால் தாய் மகன் ஆகிய 2 பேரையும் கொலை செய்து 8மாதம் பின்பு செல்போன் மூலம் போலீசார் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் போலீசாரின் செயல் பராட்டுகுரியதாக உள்ளன.

    செய்தியாளர் - மோகன்ராஜ்
    Published by:Esakki Raja
    First published: