Home /News /tamil-nadu /

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா: 5 ஆம் நாள் உற்சவம்

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா: 5 ஆம் நாள் உற்சவம்

திருவண்ணாமலை 5 ஆம் நாள் திருவிழா

திருவண்ணாமலை 5 ஆம் நாள் திருவிழா

அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்காரம்  செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா 5 ஆம் நாள்  இரவு உற்சவத்தில், பஞ்ச மூர்த்திகள் வண்ண வண்ண மலர் அலங்காரத்தில் 5ஆம் பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி  ஸ்தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

    தீபத் திருவிழாவின் 5ஆம் நாள் இரவு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், முருகர், விநாயகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.

    இதில் மகேஸ்வரி அலங்காரத்தில் அம்மன்  காட்சி அளித்தார், பஞ்சமூர்த்திகளுக்கு பல்வேறு வண்ண வண்ண மலர் மாலைகள் அலங்கரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்காரம்  செய்யப்பட்ட வாகனத்திலும், பராசக்தி அம்மன்  உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்திலும், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர்.

    இதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. பின்னர் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளும் ஒன்றன்பின் ஒன்றாக 5ஆம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    Must Read : கார்த்திகை தீப திருநாள்: வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? எங்கெல்லாம் ஏற்றினால் நல்லது?

    கொரோனா தொற்று காரணமா கணிசமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கங்களை எழுப்பி வழிபட்டனர்.

    செய்தியாளர் - அ.சதிஷ், திருவண்ணாமலை.
    Published by:Suresh V
    First published:

    Tags: Karthigai Deepam, Tiruvannamalai

    அடுத்த செய்தி