• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பக்தர்கள் கவனத்திற்கு... திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை

பக்தர்கள் கவனத்திற்கு... திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  • Share this:
    திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் பௌர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பௌர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    இதை தொடர்ந்து 19-வது மாதமாக புராட்டாசி மாத பௌர்ணமிக்கு கிரிவலத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பௌர்ணமி அன்று கிரிவலத்திற்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    Also Read : கொரோனா மூன்றாவது அலை- திருப்பதி பிரம்மோற்சவம் தொடர்பாக தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலையில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் அமலில் இருப்பதால் வரும் 20-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 5.20 மணியில் இருந்து 21-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 5.51 மணி வரை உள்ள பௌர்ணமி நாளில் அண்ணாமலையைச் சுற்றி கிரிவலம் செல்வதற்கு அனுமதி கிடையாது. எனவே, திருவண்ணாமலை மற்றும் வெளிமாவட்ட, மாநில பக்தர்கள், பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு வரவேண்டாம்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: