திருவண்ணாமலை காப்புக்காடுகளில் தண்ணீரின்றி தவிக்கும் வன விலங்குகள்

Youtube Video

திருவண்ணாமலை காப்புகாடுகளில் வனவிலங்குகள் தண்ணீரின்றித் தவிக்கும் சூழல் உள்ளது.

 • Share this:
  திருவண்ணாமலையில் கோடை காரணமாக காப்புக்காடு பகுதிகளில் உள்ள மான், குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. அவற்றுக்கு போதிய உணவு கிடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் பின்புறத்தில் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில், 10 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த காப்புக்காடு உள்ளது. இங்கு, பல்வேறு மரங்கள் மற்றும் மூலிகைச் செடி, கொடிகள் உள்ளன. அத்துடன், மான், குரங்கு, காட்டுபன்றி, முயல், சிங்கவால் குரங்கு போன்ற விலங்குகள், மயில், குருவிகள் போன்ற பல்வேறு வகை பறவைகளும் வசித்து வருகின்றன. குறிப்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் வனப்பகுதியில் உலா வருகின்றன.

  தற்போது, கோடை வெயில் காரணமாக காப்புக்காட்டிற்குள் தண்ணீர் இல்லாததாலும், இரை தேடியும் மான், குரங்குகள் கிரிவலப் பாதையில் முகாமிட்டுள்ளன. இதை அறிந்த சமூக ஆர்வலர்கள், கேரட், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள், மனிலா, கொண்டை கடலையும் வாங்கி வந்து விலங்குகளின் பசியை போக்கி வருகின்றனர்.

  மேலும், இரவில் தண்ணீர் தேடி சாலையை கடக்கும் மான்கள், கனரக வாகனங்களில் அடிப்பட்டும், நாய் கூட்டங்களிடம் கடிபட்டும் இறக்கின்றன. இதனால், வனத்திற்கு உள்ளேயே குடிநீர் தொட்டி அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் பக்தர்கள் குரங்கு, மான் போன்றவற்றுக்கு பழம், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வழங்குவர். ஆனால், முழு ஊரடங்கால் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், வன விலங்குகளுக்கு அதுவும் கிடைக்காமல் போயுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: