திருவண்ணாமலையில் அதிகரிக்கும் கொரோனா: கடைகளை முன்வந்து அடைக்க வணிகர்கள் முடிவு!

மாதிரிப் படம்

கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நாளை முதல்  7 நாட்களுக்கு திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனங்களை மாலை 5 மணிக்கு மூட வணிகர்கள் முடிவெடுத்துள்ளனர்.

 • Share this:
  அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் வரும் திங்கட்கிழமை 16ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு மாலை 5 மணிக்கு தங்களுடைய வணிக நிறுவனங்களை மூட திருவண்ணாமலை வணிகர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

  கடந்த சில நாட்களாகவே திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.  கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்க வேண்டிய முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருவண்ணாமலை தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த ஆலோசனை கூட்டத்தில், திருவண்ணாமலை நகரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வரும் 16 ஆம் தேதி (நாளை முதல்)  7 நாட்களுக்கு திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனங்கள் அனைத்தையும் மாலை 5 மணிக்கு மூட வணிகர் சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக வணிகர்கள் சங்கங்கள் முடிவெடுத்துள்ளனர்.

  மேலும் படிக்க: தமிழக அரசின் சுதந்திர தின விருதுகள் யார் யாருக்கு வழங்கப்பட்டது?


  இதனை அடிப்படையாக கொண்டு கொரோனா தொற்றின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக வரும் திங்கட்கிழமை முதல் திருவண்ணாமலை நகரப்பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் தங்களுடைய வணிகத்தினை ஒரு வார காலத்திற்கு மாலை 5 மணிக்குள் முடித்து கொள்ளும் என்று அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

  இதையும் படிங்க: தங்கம் வென்ற தங்க மங்கையை கெளரவப்படுத்த தவறிய தமிழக அரசு!


  அதன்படி ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், மொத்த வியாபார நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் உணவகங்கள், கடைகள் என அனைத்தும்  5 மணி வரை மட்டும் செயல்படும்.
  Published by:Murugesh M
  First published: