கட்டட, விவசாய தினக்கூலிகளாக மாறிய தனியார் பள்ளி ஆசிரியர்கள்.. கொரோனா படுத்தும் பாடு!

மாதிரி படம்

கிராமப்புறங்களில் உள்ள ஆசிரியர்கள், கட்டடம் மற்றும் விவசாய பணிகளுக்கு சென்று தங்களது பிழைப்பை நடத்தி வருகின்றனர்,

 • Share this:
  கொரோனா பரவல் காரணமாக ஓரண்டுகளாக தனியார் பள்ளிகள் மூடப்பட்டதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

  திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் 300க்கு மேற்பட்ட தனியார் பள்ளிகளில் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக தனியார் பள்ளிகள் மூடப்பட்டதால். அப்பள்ளி ஆசிரியர்கள் வருமானமின்றி வீட்டிலேயே முடங்கி உள்ளனர். முதலில் கொரோன பரவல் படிப்படியாக குறைந்ததால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். அதற்கு மாறாக நாட்டில் கொரோனா 2வது கொரோனா அலை வீசுவதால் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தனியார் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன.

  இதன் காரணமாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் வருமானமின்றி குடும்பத்தை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் கிராமப்புறங்களில் உள்ள ஆசிரியர்கள், கட்டடம் மற்றும் விவசாய பணிகளுக்கு சென்று தங்களது பிழைப்பை நடத்தி வருகின்றனர், அதில் சொற்ப ஊதியமே கிடைப்பதால், குடும்பத்தை நடத்துவதற்கு மிகவும் கடினமாக உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

  ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், 25 கிலோ இலவச அரிசி வழங்குபோது போல் தமிழக அரசும் தங்களுக்கு வரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  அ.சதிஷ்,  செய்தியாளர் - திருவண்ணாமலை

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Arun
  First published: