Home /News /tamil-nadu /

தொடர் திருட்டில் ஈடுபட்ட திருடன்: லிப்ட் கேட்டு வந்தபோது சிக்கினான்!

தொடர் திருட்டில் ஈடுபட்ட திருடன்: லிப்ட் கேட்டு வந்தபோது சிக்கினான்!

திருடன் கைது

திருடன் கைது

இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணமாக பேசி பதட்டத்துடன் காணப்பட்டார். சந்தேகமடைந்த கண்ணமங்கலம் போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரத்து உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் போலீசாரின் வாகன தணிக்கையில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்த போது சிக்கினான். அவனிடமிருந்து 10சவரன் தங்க நகையை  கண்ணமங்கலம் போலீசார் மீட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலம் பேரூராட்சியில் கடந்த சில நாட்களாக வீடுகளில் தொடர் திருட்டு சம்பவம் அதிகளவில் நடைபெற்று வருகின்றன.  இதனால் திருவண்ணாமலை எஸ்.பி பவன்குமார் உத்தரவின் பேரில் கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், இன்று கண்ணமங்கலம் பேருந்து நிலையம் புதுப்பேட்டை அருகே கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் லிப்ட் கேட்டு வந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணமாக பேசி பதட்டத்துடன் காணப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த கண்ணமங்கலம் போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து உள்ளனர்.  அதில்,  திருவண்ணாமலை அருகே உள்ள மங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகன்(43) என்பதும் கண்ணமங்கலம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும்  விசாரணையில் தெரிய வந்தன.

    பின்னர் முருகனிடமிருந்து தாலி சரடு செயின் உள்ளிட்ட 10சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து வழக்கு பதிந்த போலீசார், ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர் - ம.மோகன்ராஜ் ,ஆரணி
    Published by:Murugesh M
    First published:

    Tags: Arrest, Thief, Thiruvannamalai

    அடுத்த செய்தி