திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த பர்வதமலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கட்டளைதாரர்கள் 5 க்கும் மேற்பட்டவர்கள் 4,500 அடி உயரம் கொண்ட பருவத மலை மீது மகா தீபம் ஏற்றுவதற்காக நேற்று மலைக்கு ஏறி சென்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் மலை மீது மகா தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் செய்து பின்னர் மழை காரணமாக அங்குள்ள ஜெனரேட்டர் அறையில் தங்கியுள்ளனர்.
பின்னர் விடிகாலையில் எழுந்தபோது ஒருவர் மட்டும் இருந்துள்ளார்.
மீதமுள்ள நான்கு நபர்களும் மயக்க நிலையில் தொடர்ந்து இருந்துள்ளனர்.
இந்நிலையில் அவர் கொடுத்த தகவலின் பேரில் கலசப்பாக்கம் தாலுகாவைச் சேர்ந்த தீயணைப்பு துறையினர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் இணைந்து பருவத மலை உச்சிக்குச் சென்றனர்.
இதில் மயங்கிய நிலையில் இருந்த நான்கு பேரையும் தண்ணீர் தெளித்து முதலுதவி சிகிச்சை அளித்து எழுப்பியுள்ளனர். இதில் மூன்று நபர்கள் மயக்கம் தெளிந்து எழுந்துள்ள நிலையில் கணேசன் வயது 40 என்பவர் மட்டும் தொடர்ந்து மயக்க நிலையில் இருந்ததால் அங்கிருந்த மருத்துவ குழுவினர் உடனடியாக அவரை அந்தப் பகுதி மக்கள் உதவியுடன் டோலி கட்டி கணேசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்க நிலையில் இருந்த கணேசனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.