Home /News /tamil-nadu /

சினிமா பாணியில் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றவர் ஷாக் அடித்ததில் பலி

சினிமா பாணியில் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றவர் ஷாக் அடித்ததில் பலி

பாதிக்கப்பட்ட சரண்ராஜ்

பாதிக்கப்பட்ட சரண்ராஜ்

மின்சார ஒயரை கொண்டு கொலை செய்ய திட்டமிட்ட நபரே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மற்றும் காப்பாற்ற வந்த மற்றொரு நபரும் இறந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    நம்ம வீட்டு பிள்ளை பட பாணியில் நிலத்தகராறு காரணமாக மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் திருவண்ணாமலையில் நடந்துள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டம் சொரகொளத்தூர் கிராமத்தை சேர்ந்த சரண்ராஜ் (வயது 26), ஏழுமலை (வயது 45) ஆகிய இருவரும் உறவினர்கள் இவர்களது  விவசாய நிலங்களும்  அருகே அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 5 வருடங்களாக இருவருக்கும் இடையே நிலத்தகராறு மற்றும் நிலத்தில் உள்ள பயிர்களை மாடுகளை விட்டு மேய்ப்பது போன்ற தகராறுகள் அடிக்கடி நடந்து வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கமான தகராறு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கைகலப்பு வரை சென்றுள்ளது. இதனால் ஏழுமலை உறவினரான சரண்ராஜ் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

    Also Read: தாயின் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. போக்சோ சட்டத்தில் இருவர் கைது

    இந்நிலையில் நேற்று இரவு 12 மணி அளவில் சரண்ராஜ் அவரது வீட்டு அருகே உள்ள நிலத்தில் மாட்டுக் கொட்டகையில் கட்டிலில் தூங்கியுள்ளார். ஏழுமலை அருகே உள்ள தனது நிலத்தில் இருந்து மின்சார வயர் மூலம் மின்சாரத்தை கொண்டு வந்து நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வருவது போன்று உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.அதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் செய்து முடித்து நேற்று இரவு சரியாக 12 மணியளவில் எல்லாம் உறங்கிய பின்னர் தனது விவசாய நிலத்திலுள்ள பம்ப் செட்டில் இருந்து மின்சார வயர் மூலம் மின்சாரத்தை கொண்டு வந்துள்ளார்.

    Also Read: கணவனை இழந்த பெண்ணிடம் காதல் வார்த்தை பேசி கர்ப்பமாக்கிய காவலர்.. நீதி கேட்டு 2 வருடமாக போராடும் அவலம்

    மின்சார ஒயரின் நுனியில் சிறு கம்பி போன்று கட்டி வைத்து நன்றாக தூங்கிக் கொண்டிருந்த சரண்ராஜின் பக்கத்தில் நின்று      வலது கண்ணில் மின்சார ஒயரை வைத்த பொழுது அலறியடித்து சரண்ராஜ்  எழுந்தபோது ஏழுமலையின் கையில் வைத்திருந்த மின்சார வயர் அவர் மீது பட்டதால் மின்சாரம் பாய்ந்து ஏழுமலை சம்பவ இடத்தில் பலியானார். சரண்ராஜின் அலறல் சத்தம் கேட்ட அவரது மாமா ரேணுகோபால்  அந்தப்பகுதியில் ஓடிவந்து வரும்பொழுது அருகில் இருந்த மின்சார ஒயரை மிதித்ததால் அவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார்.

    மின்சாரம் பாய்ந்த சரண்ராஜ் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்துபோன ஏழுமலை மற்றும் ரேணுகோபாலின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Also Read: கணவனின் சித்தி மகனுடன் மனைவி உல்லாசம்.. தட்டிக்கேட்ட கணவன் மண்டையை உடைத்த கள்ளக்காதலன்

    இதுகுறித்து கலசபாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூங்கிக்கொண்டு இருந்த நபரை மின்சாரம் கொண்டு கொலை செய்ய முயன்ற கெடுவான் கேடு நினைப்பான் என்பதனை மெய்ப்பிக்கும் வகையில் மின்சார ஒயரை கொண்டு கொலை செய்ய திட்டமிட்ட நபரே மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மற்றும் காப்பாற்ற வந்த மற்றொரு நபரும் இறந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: அ.சதிஷ் (திருவண்ணாமலை) 
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Electricity, Tamilnadu, Thiruvannamalai

    அடுத்த செய்தி