Home /News /tamil-nadu /

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 6ம் நாள் : பராசக்தி அம்மன் உலா

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 6ம் நாள் : பராசக்தி அம்மன் உலா

கார்த்திகை தீபத் திருவிழா

கார்த்திகை தீபத் திருவிழா

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ஆம் நாள் இரவு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன் 5ஆம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா 6ம் நாள்
    அண்ணாமலையார் உண்ணாமுலைஅம்மன் வெள்ளி விமானத்திலும், பராசக்தி  அம்மன் காஞ்சிகாமாட்சி அலங்காரத்திலும் 5ஆம் பிரகாரத்தில் உலா வந்தனர்.

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

    தீபத் திருவிழாவின் 6ஆம் நாளின் இரவு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், முருகர், விநாயகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.

    இதில்  பராசக்தி  அம்மன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு பல்வேறு வண்ண வண்ண பூக்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலைகளும், கற்கள் பதித்த ஆபரணங்கள்  அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மன் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்காரம்  செய்யப்பட்ட வெள்ளி விமானத்திலும்   பஞ்சமூர்த்திகள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர்.

    இதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. பின்னர் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் வெள்ளி விமனத்திலும், பராசக்தி  அம்மன் காஞ்சி காமாட்சி அலங்காரத்திலும், சண்டிகேஸ்வரர் என பஞ்ச மூர்த்திகளும் ஒன்றன்பின் ஒன்றாக 5ஆம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    Must Read : திருவண்ணாமலை தீப திருவிழா... 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை

    கொரோனா தொற்று காரணமாக குறைவான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    செய்தியாளர் - அ.சதிஷ், திருவண்ணாமலை.
    Published by:Suresh V
    First published:

    Tags: Karthigai Deepam, Thiruvannamalai

    அடுத்த செய்தி