ஆரணியில் ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட குழந்தை உயிரிழப்பு: 40 பேருக்கு வாந்தி - உரிமையாளர், சமையலர் கைது

Youtube Video

திருவண்ணாமலையிலுள்ள அசைவ ஹோட்டலில் பிரியாணி உள்ளிட்ட உணவுகள் சாப்பிட்டு குழந்தை இறப்பு மற்றும் 40 பேருக்கு வாந்தி மயக்கம் வந்த விவகாரத்தில் ஹோட்டல் உரிமையாளர், சமையல் செய்பவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:
    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆரணியை சேர்ந்த அம்ஜத் பாட்ஷா என்பவரின் அசைவ 7ஸ்டார் ஓட்டல் இயங்கி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆரணி பகுதியை சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்டோர் 7 ஸ்டார் ஒட்டலில் இரவு சிக்கன் தந்தூரி, பரோட்டா, பிரியாணி உள்ளிட்டவைகளை சாப்பிட்டு உள்ளனர். இதில் 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர். மேலும் மருத்துவமனையில் இரண்டு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் சிகிச்சை பலினின்றி 10வயது சிறுமி லோசிகா என்ற குழந்தை நேற்று இறந்தது. இதையடுத்து அந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தற்பொழுது அந்த ஓட்டலின் உரிமையாளர் அம்ஜத் பாஷா அந்த ஹோட்டலில் பணிபுரியும் சமையல் மாஸ்டர் முனியாண்டி இருவரையும் ஆரணி நகர காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்திய தண்டனைச் சட்டம், 284, 337, 304A ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உணவில் நச்சுப்பொருட்கள் கலந்தது, அதனால் மற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது 304A கொலையில்லா மரணம் என்று மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியாக ஆரணியில் இயங்கி வரும் அனைத்து அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வாளர்கள் சேகர் இளங்கோ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். உணவுகள் தயாரிக்கும் சமையல் கூடம் மற்றும் சமையலர்கள் பயன்படுத்தும் பயன்படுத்தும் பொருட்களின் தரம் சிக்கன், மீன், நண்டு, மட்டன் உள்ளிட்ட மாமிச பொருட்களை ஆய்வு செய்தனர்.

    அதில் சிக்கன், மட்டன், மீன் ஆகியவற்றை பதப்படுத்தும் கூலர் இயந்திரத்தின் தன்மையைப் பொருத்து அதிலிருந்த கெட்டுப்போன 15 கிலோ சிக்கன், மீன், மட்டன் ஆகியவற்றை பறிமுதல் செய்து அதில் கெமிக்கல் ஊற்றி அழித்தனர். மேலும் பாதுகாப்பற்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை பறிமுதல் செய்து அந்த ஓட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதில் அரசு விதித்த நடைமுறைகளை பின்பற்றி மசாலா பொருட்கள் கொண்டு இயக்க வேண்டும் மற்ற பொருட்களை தடை செய்யபட்டுள்ளதாகவும் உள்ளிட்ட நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தபட்டன.
    Published by:Karthick S
    First published: