Home /News /tamil-nadu /

திருவண்ணாமலை கிரிவலத்தில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் - சொந்த ஊர் செல்ல முடியாமல் அவதி

திருவண்ணாமலை கிரிவலத்தில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் - சொந்த ஊர் செல்ல முடியாமல் அவதி

Thiruvannamalai | திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு ரயில் வசதி இல்லாமல் மக்கள் ரயில் நிலையத்தில் அலைமோதி அவதி

Thiruvannamalai | திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு ரயில் வசதி இல்லாமல் மக்கள் ரயில் நிலையத்தில் அலைமோதி அவதி

Thiruvannamalai | திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு ரயில் வசதி இல்லாமல் மக்கள் ரயில் நிலையத்தில் அலைமோதி அவதி

    சித்ரா பவுர்ணமியையொட்டி இரண்டாவது நாளாக தொடரும் கிரிவலம். கயிலாய வாத்தியங்கள் முழங்க கிரிவலம் வந்த ஆன்மீக பக்தர்கள். சிறப்பு ரயில் வசதி இல்லாததால் ரயில் நிலையத்தில் அலைமோதிய பக்தர்களின் கூட்டம். ரயிலில் முண்டியடித்து ஏறி சென்றதால் சிறிது நேரம் பரபரப்பு.

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பௌர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் முதல் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.

    விசேஷமான பௌர்ணமியாக கருதக்கூடிய சித்ராபவுர்ணமியான நேற்று அதிகாலை 02.33 முதல் இன்று அதிகாலை 01.17 வரை ஆன்மீக பக்தர்கள் கிரிவலம் வர உகந்த நேரம் என திருக்கோவில் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி நேற்று காலை முதல் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்

    இரண்டாவது நாளான இன்றும் ஆன்மீக பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கயிலாய வாத்தியங்கள் முழங்கியபடி கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசித்து வருகின்றனர்.

    20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்ததை அடுத்து திருவண்ணாமலை நகரம், மாடவீதி, கிரிவலப்பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உடனுக்குடன் குப்பைகளை அகற்றி தூய்மைபடுத்தும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு நகரை தற்போது தூய்மையாக்கி வருகின்றனர்.

    Read More : பிரசித்தி பெற்ற ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் கிரிவலம்... பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்தி முழக்கம் 

    குறிப்பாக ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்காததால் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அப்போது விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு நோக்கி சென்ற பயணிகள் ரயிலில், பக்தர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு ஏறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போதிய ரயில் வசதி இல்லாததால் சென்னை, வேலூர் செல்லும் பயணிகள் 2 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று அரசு பேருந்தில் ஏறி தங்கள் பகுதிகளுக்குச் சென்றனர்.

     
    Published by:Elakiya J
    First published:

    Tags: Thiruvannamalai

    அடுத்த செய்தி