Home /News /tamil-nadu /

நியூஸ்18 செய்தி எதிரொலி: குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற மாவட்ட ஆட்சியர்... வீடு கட்டித் தருவதாகவும் உறுதி

நியூஸ்18 செய்தி எதிரொலி: குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற மாவட்ட ஆட்சியர்... வீடு கட்டித் தருவதாகவும் உறுதி

மாவட்ட ஆட்சியர் உதவி

மாவட்ட ஆட்சியர் உதவி

பெற்றோரை இழந்து தனியாக தவித்துவரும் மூன்று குழந்தைகளையும் நேரில் சென்று சந்தித்த திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ், அவர்களின் கல்வி செலவை அரசு ஏற்கும் என்று கூறியதோடு பல்வேறு உதவிகளையும் வழங்கினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஆரணி அருகே பெற்றோரை இழந்த 3 குழந்தைகள் அடுத்தவேளை உணவிற்கு திண்டாடுவது குறித்தும் தங்கள் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையையும் NEWS18 SPECIAL செய்தியில் வெளியிட்டு இருந்தோம் இதன் எதிரொலியாக..
    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்  குழந்தைகளை நேரில் சந்தித்து படிப்பு செலவு முழுவதும் மாவட்ட நிர்வாகம் ஏற்று கொள்ளும் என்றும் வீடு கட்டித்தரப்படும் என்றும் உறுதி அளித்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆவணியாபுரம் கிராமத்தை சேர்ந்த டெய்லர் லோகநாதன்- வேண்டா தம்பதியினருக்கு கார்த்திகா(15) சிரஞ்சீவி(14) நிறைமதி(10) என மூன்று குழந்தைகள் உள்ளனர். அதே கிராமத்தில் கார்த்திகா அரசு பள்ளியில் 10ம் வகுப்பும் சிரஞ்சீவி 9ம் வகுப்பும் நிறைமதி 6ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    கடந்த 4 வருடங்களுக்கு முன்பு லோகநாதன் நோய்வாய்பட்டு இறந்துவிட்டார். 3 குழந்தைகளை வேண்டா 100 நாள் வேலைக்கு சென்று காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில்  புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வேண்டா கடந்த 3 மாதம் முன்பு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தற்போது 3 குழந்தைகளும் தங்களின் தட்டை வீட்டில் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


    மேலும் மதிய நேரத்தில் அரசு பள்ளியில் வழங்கும் சத்துணவை சாப்பிட்டு வாழ்வதாகவும் இரசு உணவு மற்றும் காலை உணவை வழங்க யாரும் இல்லாத நிலையில் தவித்து வருவதாக 3 குழந்தைகள் கண்ணீர் மல்க  தெரிவித்தனர். இது குறித்த செய்தி நமது நியூஸ்18 தமிழ்நாடு சேனலில் ஒளிபரப்பப்பட்டது.



    இதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆவணியாபுரம் கிராமத்திற்கு நேரில் சென்று பெற்றோரை இழந்த குழந்தைகளை சந்தித்து 3 குழந்தைகளின் படிப்பு செலவு அனைத்தையும்  மாவட்ட நிர்வாகமே ஏற்று கொள்ளும் என்று தெரிவித்தார்.  குடும்பத்தில் இறந்தவர்களின் நிவாரணமாக 22 ஆயிரம் ரூபாய் காசோலை, மாதம் தலா 2 ஆயிரம் என 3 குழந்தைகளுக்கு வழங்கிய ஆணை, வீட்டு மனை பட்டா பூர்வீக சொத்தின் பெயர் மாற்றம், வீடு கட்டும் பணி ஆணை, மாவட்ட கல்வி சார்பில் 5 ஆயிரம் ரொக்கம், 3 அரிசி மூட்டை, துணிகள் ஆகியவற்றையும் அவர் வழங்கினார்.

    செய்தியாளர்: மோகன்ராஜ் - திருவண்ணாமலை
    Published by:Murugesh M
    First published:

    Tags: Thiruvannamalai

    அடுத்த செய்தி