Home /News /tamil-nadu /

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.... மீண்டும் ஜவ்வாதுமலைக்கு வந்த ஒற்றைக் கொம்பு காட்டுயானை

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.... மீண்டும் ஜவ்வாதுமலைக்கு வந்த ஒற்றைக் கொம்பு காட்டுயானை

ஒற்றை கொம்பு காட்டு யானை

ஒற்றை கொம்பு காட்டு யானை

Javadhu Hills : 7 மாதங்களுக்கு முன்னனர் ஜவ்வாது மலையை விட்டு சென்ற ஒற்றைக் கொம்பு காட்டு யானை, மீண்டும் ஜவ்வாதுமலைக்கே வந்துள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் 280க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்தமலை கிராமங்களில் பெரும்பாலும் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரா மாநிலத்தில் இருந்து எட்டு யானைகள் காட்டுப் பாதையில் இருந்து திருப்பத்தூர் வழியாக ஜவ்வாது மலை வந்தடைந்தது. அதில் ஒரு யானை திருப்பத்தூர் இரயில் பாதையில் சென்று இரயிலில் அடிபட்டு இறந்துவிட 7 யானைகள் ஜவ்வாது மலையில் தஞ்சமடைந்துன.

அந்த 7 யானைகளும் திரும்பவும் ஆந்திர மாநிலத்திற்கு செல்ல முடியவில்லை காரணம் மலைகளைக் குடைந்து எட்டு வழி சாலை அமைக்கப்பட்டு விட்டது. கடந்த 7 ஆண்டுகள் முன்பு ஜவ்வாது மலையில் இருந்து 6 யானைகள் மட்டுமே பிரிந்து சென்று திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு பகுதியில் உள்ள காப்புக்காட்டில் தஞ்சம் அடைந்தன. இந்த ஒற்றைக் கொம்பு யானை மட்டும் ஜவ்வாது மலையில் தஞ்சம் அடைந்து அங்கு உள்ள விவசாய நிலங்களில் விளையகூடிய சாமை, திணை, பலாப்பழம் உள்ளிட்டவகளை உண்டு வாழ்ந்து வருகிறது.

பிரிந்துசென்ற 6 யானைகள் தண்டராம்பட்டு காப்புக்காட்டில் தஞ்சமடைந்த நிலையில், அதை அனைத்தையும் வனத்துறையினர் கடந்த 7 வருடங்களுக்கு முன் கும்கி உதவி உடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர் முதுமலை டாப்சிலிப் கொண்டு சென்று 6 யானைகளையும் குண்டியில் அடைத்து பயிற்சி கொடுத்து  கும்கியாக மாற்றிவிட்டனர். தற்போது இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த அந்த ஒற்றைக் கொம்பு மற்றும் ஒற்றை கண் பார்வை கொண்ட யானை 7 ஆண்டுகளுக்கு மேலாக ஜவ்வாது மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆலங்காயம் உள்ளிட்ட காட்டுப்பகுதியில் மாறி மாறி சுற்றிக்கொண்டு கொண்டிருந்தது.

7 மாதங்களுக்கு முன்பு ஜவ்வாது மலையைவிட்டு சென்ற இந்த ஒற்றைக் கொம்பு யானை மீண்டும் இன்று திருப்பத்தூரிலிருந்து காவலூர் காட்டு வழியாக ஜவ்வாதுமலைக்கு வந்த ஒற்றைக் கொம்பு யானை வாகனம் சப்தத்தைக் கேட்டு காட்டில் இருந்து பேருந்து செல்லும் வழியாக வந்தது. அப்பொழுது அரசுப்பேருந்து ஜவ்வாது மலையில் இருந்து காவலூர் வழியாக திருப்பத்தூருக்கு சென்ற அரசு பேருந்து ஒற்றை கொம்பு யானை வருவதைக் கண்ட அரசு பேருந்து ஓட்டுநர் யானை வருவதை பார்த்ததும் பேருந்தை இயக்காமல் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க  அறிவுறித்தினார்.

Must Read : ‘முன்னெல்லாம் படிச்சு எழுத கஷ்டமா இருந்துச்சு.. இப்ப பாத்து எழுத கஷ்டமா இருக்கு' - இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் மீம்ஸ்

ஒற்றைக் கொம்பு யானை ஜன்னல் வழியாக தும்பிக்கையை வைத்து அனைவரையும் அதிர வைத்தது அரசுப் பேருந்தை கடந்து சென்றவுடன் ஓட்டுநர் உடனடியாக பேருந்தை இயக்கி சென்றார்.
அரசுப் பேருந்தில் பயணித்த அனைத்து மலைவாழ் மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 7 மாதங்களுக்கு முன்பு ஜவ்வாது மலையைவிட்டு சென்ற ஒற்றைக் கொம்பு காட்டு யானை மீண்டும் ஜவ்வாதுமலை வந்ததால் மலை கிராம மக்களிடையே பெரும் அச்சமும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : கொரோனா பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும்? உலக சுகாதார நிறுவனம் புதிய தகவல்

எனினும், இந்த ஒற்றைக் கொம்பு யானையானது இதுவரை பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published:

Tags: Elephant, Tiruvannamalai

அடுத்த செய்தி