முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நள்ளிரவு வரை படித்துவிட்டு தூங்க சென்ற சிறுவன்.. வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சோகம்..

நள்ளிரவு வரை படித்துவிட்டு தூங்க சென்ற சிறுவன்.. வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சோகம்..

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு

Thiruvannamalai: திருவண்ணாமலை மாவட்டம் போளுர் பேரூராட்சி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடராசன் செல்வி தம்பதியினருக்கு வினோத்குமார் (16) தினகரன் (15) என் இரண்டு மகன்கள் உள்ளனர்.

  • Last Updated :

போளுரில் தூங்கி கொண்டிருக்கும் போது வீட்டின் மேற்கூரை இடிந்து சிறுவன் உயிரிழந்த நிலையில் மற்றொரு சிறுவன் கவலைக்கிடமான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் பேரூராட்சி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடராசன் செல்வி தம்பதியினருக்கு வினோத்குமார் (16) தினகரன் (15) என் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு நடராஜன் இறந்து விட்டார். தற்போது தாய் கூலி வேலை செய்து தன்னுடைய 2 மகன்களை வளர்த்து வருகின்றார்.

மேலும் தற்போது பள்ளி பொது தேர்வு நடைபெற்று வருவதால் வினோத்குமார் தினகரன் ஆகியோர் நேற்று நள்ளிரவு வரையில் படித்து விட்டு விடியற்காலையில் தூங்க சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே சேதமடைந்த மேற்கூரை திடிரென இடிந்து விழுந்ததில் சிறுவர்கள் வினோத்குமார், தினகரன் ஆகியோர் சிக்கி கொண்டனர்.  இதில் பலத்த காயமடைந்த வினோத்குமார், தினகரனை  உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு போளுர் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Also read... சட்டவிரோத பேனர்கள் வைத்தவர்களிடமே அதை அகற்றியதற்கான செலவை வசூலிக்க வேண்டும் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இதில் சிகிச்சை பலனின்றி தினகரன் என்ற சிறுவன் உயிரிழந்த நிலையில், வினோத்குமார் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து போளுர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-செய்தியாளர்: மோகன்ராஜ்.

First published:

Tags: Thiruvannamalai