திருநங்கை என்று ஒதுக்கி விடாமல் பெற்றோர் அரவணைத்ததால் சாதித்தேன் - எஸ்.ஐ சிவன்யா

ருநங்கை எஸ்.ஐ சிவன்யா

குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று காவல் துணை கண்காணிப்பாளராக வேண்டும் என்பதே தனது லட்சியம் என சிவன்யா தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சமூகத்தில் நிலவும் சவால்களையும், தனது வறுமையையும் வென்று, தமிழகத்தின் இரண்டாவது திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் என்ற, பெருமையை பெற்றுள்ளார் திருவண்ணாமலையை சேர்ந்த சிவன்யா.

  திருநங்கைகளின் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினாலும், சமூகத்தில் தற்போதும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு தான் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். பிள்ளைகளின் உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல், அவர்களை குடும்பத்தில் இருந்து பெற்றோர்களே வெளியேற்றும் அவல நிலையும் நீடித்து வருகிறது.

  Also Read : கோவையில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்... என்ன இயங்கும்? என்ன இயங்காது?

  இந்நிலையில் தான், திருவண்ணாமலை அடுத்த பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்த, செல்வவேல்-வளர் தம்பதியினர் இந்த சமூகத்திற்கு முன்னுதரானமாக செயல்பட்டுள்ளனர். கல்லூரி படிப்பின் போது திருநங்கையாக மாறிய தனது இரண்டாவது மகனான சிவன்யாவிற்கு, தங்களால் முடிந்த அனைத்து ஆதரவையும் அளித்து, தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளனர்.  திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் வணிகவியலில், இளங்கலை பட்டப்படிப்பை முடித்த சிவன்யா, தனது கனவான காவலர் பணிக்கான பயிற்சிகளை தொடங்கியுள்ளார், விடாமுயற்சியின் காரணமாக நேர்முகதேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வு என அனைத்திலும் தேர்வு பெற்ற சிவன்யாவை, உதவி காவல் ஆய்வாளராக நியமித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் பணி ஆணையை வழங்கினார்.

  Also Read : மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்தித்து விடாதீர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

  குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று காவல் துணை கண்காணிப்பாளராக வேண்டும் என்பதே தனது லட்சியம் என சிவன்யா தெரிவித்துள்ளார். சமூகத்தின் ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் காதில் கொள்ளாமல், சிவன்யா மீது உண்மையான அன்பை செலுத்திய செல்வவேல் - வளர் போன்ற பெற்றோரே திருநங்கை சமூகத்திற்கு அவசியமாகின்றனர். திருநங்கை என்று ஒதுக்கி விடாமல் பெற்றோர் அரவணைத்தால், எந்த துறையிலும் தங்களால் சாதிக்க முடியும் என உரக்க சொல்கிறார் சிவன்யா.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: