சரியாக பொருட்கள் விநியோகம் செய்யாத ரேஷன் கடை ஊழியர் பணியிடை நீக்கம்!

சரியாக பொருட்கள் விநியோகம் செய்யாத ரேஷன் கடை ஊழியர் பணியிடை நீக்கம்!

ரேஷன் கடை

ஆரணி அருகே சரி வர பொருட்களை விநியோகம் செய்யாத அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான, ரேஷன் கடை ஊழியரை அதிமுக வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 • Share this:
  ஆரணி அருகே சரி வர பொருட்களை விநியோகம் செய்யாத அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான, ரேஷன் கடை ஊழியரை அதிமுக வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கேளுர் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த சங்கீதா அன்பழகன் என்பவர் தற்போது பதவி வகித்து வருகின்றார். ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அன்பழகன் என்பவர் கேளுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஆத்துவாம்பாடி, கட்டிபூண்டி ஆகிய கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகின்றார்.

  கேளுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராக அதே கிராமத்தை சேர்ந்த பொன்னம்பலம் என்பவர் இருந்து வருகின்றார்.
  கடந்த 6மாதத்திற்கு மேலாக கட்டிபூண்டி, ஆத்துவாம்பாடி ஆகிய கிராமத்தில் நியாய விலை கடையை சரிவர திறக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பொருட்கள் விநியோகம் சரிவர செய்வதில்லை என்பதால் கிராம பொதுமக்கள் கேளுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் புகார் அளித்தனர்.

  தொடர்ந்து புகார் வந்த காரணத்தினால் துறை ரீதியான நடவடிக்கையாக அதிமுகவை சேர்ந்த கேளுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பொன்னம்பலம், நியாய விலை கடை விற்பனையாளரும் கேளுர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா அன்பழகனின் கணவரான அன்பழகனை தற்காலிக பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  மேலும் தற்போது ஆத்துவாம்பாடி, கட்டிபூண்டி கிராமத்தில் உள்ள நியாய விலைகடையில் மாற்று ஊழியரை பணி அமர்த்தி பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

  செய்தியாளர் - மோகன்ராஜ்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: