• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சொத்துப்பிரச்னையில் சகோதரனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த தம்பி - ஆரணியில் நடந்த பயங்கரம்

சொத்துப்பிரச்னையில் சகோதரனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த தம்பி - ஆரணியில் நடந்த பயங்கரம்

அண்ணனை கொன்ற தம்பி கைது

அண்ணனை கொன்ற தம்பி கைது

சொத்துப்பிரச்னையில் தூங்கி கொண்டிருந்த அண்ணன் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த தம்பியை போலீஸார் கைது செய்தனர்.

  • Share this:
    ஆரணி அருகே சொத்து பிரச்னையில் தன்னுடைய பங்கை வழங்க கோரி தொந்தரவு செய்த அண்ணனை தூங்கும் போது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த பாசக்கார தம்பி கைது.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள விளைசித்தேரி கிராமத்தில் வசிக்கும் வெள்ளை என்பவருக்கு ரமேஷ், புருஷோத்தமன், ராஜசேகர் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் புருஷோத்தமன் நெசவு தொழில் செய்து வருகிறார். தி திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.  ரமேஷ் மற்றும் ராஜசேகர்  இருவரும் சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
    குடும்பத்தின் பூர்வீக சொத்தாக வீடு இருந்துள்ளன. இதனையடுத்து 3 மகன்களுக்கும்  சொத்தை பிரித்து கொடுத்துள்ளனர்.

    இதில் புருஷோத்தமனுக்கு சொத்தின் பங்கை கொடுப்பதாக கூறி 7லட்சம் ரூபாயில் முதல் தவணையாக 1லட்சம் வழங்கபட்டுள்ளது.
    மீதி தொகையை கொடுக்க ராஜசேகர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவதாக தெரிகின்றன.இந்நிலையில் நேற்று முன்தினம் அண்ணன் தம்பி இடையே மோதல் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த ராஜசேகர் தன்னுடைய அண்ணன் புருஷோத்தமன் வீட்டு மாடியில் தூங்கி கொண்டிருக்கும் போது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
    இதில் தீயில் கருகி அலறல் சத்தததுடன் எழுந்து மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

    அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் புருஷோத்தமனை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் இன்று விடியற்காலையில் புருஷோத்தமன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    இச்சம்பவம் குறித்து ஆரணி கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து தூங்கி கொண்டிருந்த அண்ணன் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த தம்பியை கைது செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னியில் ஆஜர்படுத்தி போளுர் கிளை சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர்: மோகன்ராஜ் (ஆரணி)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: