முழு ஊரடங்கு : திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணியில் 1197 காவலர்கள்

திருவண்ணாமலை

ஒரு வார கால முழு ஊரடங்கு உத்தரவால் 15 நிரந்தர சோதனைச்சாவடி 50 தற்காலிக சோதனை சாவடி அமைத்து 1197 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

  • Share this:
தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் வருகிற 31 ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலையின் முக்கிய சாலைகள் ஆன தேரடி வீதி, சின்ன கடை வீதி, அண்ணா சாலை, போளூர் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மருந்தகங்கள், மருத்துவமனைகள், நாட்டு மருந்து கடைகள் பால் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 1 கூடுதல் கண்காணிப்பாளர், 8 துணை கண்காணிப்பாளர், 26 ஆய்வாளர்கள், ஆயுதப்படை வீரர்கள் ஊர்க்காவல் படையினர் என 1197 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க... Egg Price | முட்டை விலை ஒரே வாரத்தில் கிடுகிடு உயர்வு

அதே போல் மாவட்ட எல்லைகளில் 15 இடங்களில் நிரந்தர சோதனைச் சாவடி அமைக்கப்பட்டும் உள் மாவட்டத்தில் 50 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டும் பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாடாத வாறு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அத்தியாவசிய பணிகளுக்குச் செல்லும் அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் அடையாள அட்டைகள் காண்பித்த பிறகு வாகனங்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

செய்தியாளர்: அ.சதிஷ், திருவண்ணாமலை



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: