ஆரணி அருகே இரவில் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கள்ள காதலன் அதிர்ச்சி வாக்குமூலம்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த இருசப்பன் மனைவி சாந்தி (47). கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி இரவு 8.30 மணியளவில் சாந்தியின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது.இதனையடுத்து வீட்டில் இருந்த தனது மகளிடம் வெளியில் செல்வதாக கூறி புறப்பட்டுள்ளார். வெளியில் சென்ற சாந்தி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து சாந்தி குடும்பத்தினர் அவரை தேடி உள்ளனர்.
Also Read: உயர்சாதி இளைஞர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கிராம உதவியாளர் - கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
மறுநாள் காலை புதுப்பாளையம் அருகே உள்ள விவசாய நிலத்தில் சாந்தி சடலமாக கிடப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து பொதுமக்கள் அங்கு விரைந்தனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சாந்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். சாந்தியின் இரண்டு காதுகளும் அறுப்பட்ட நிலையில் இருந்தது.
இந்தச் சம்பவம் குறித்து ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைத்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். சாந்திக்கு கடைசியாக யார் போன் செய்தது. அவர் யாரை பார்ப்பதற்காக வெளியில் சென்ற என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக சாந்தியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் சுமார் அந்தப்பகுதியை சேர்ந்த 100 நபர்களிடம் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
Also Read: சூர்யா படம்.. சென்னையில் துப்பாக்கியுடன் வலமcrime வந்த அசிஸ்டெண்ட் - பிடித்து விசாரிக்கும் போலீஸ்
இந்நிலையில் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பால் வியாபாரியான வேல்முருகன் (47) என்பவர் சாந்தி கொலை வழக்கு தொடர்பாக புதுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் என்பவரிடம் சரணடைந்தார். அதனையடுத்து கோபிநாத் கண்ணமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தன் பேரில் கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் சசிக்குமார் வேல்முருகனை கைது செய்தார்.
திருவண்ணாமலை எஸ்.பி பவன்குமார் வேல்முருகனை சம்பவ இடத்துக்கு நேரில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார். போலீசாரிடம் வேல் முருகன் கூறியதாவது, “சாந்திக்கும் எனக்கு கடந்த 4 வருடமாக கள்ளதொடர்பு இருந்தது. சாந்தி இப்போது என்னை விட்டு விலகிச்செல்ல ஆரம்பித்துவிட்டார். என்னுடன் பழகுவதையும் நிறுத்திவிட்டார்.
இதனால் சாந்திக்கு போனில் அழைப்பு விடுத்து எப்போதும் தனிமையில் உள்ள இடத்திற்கு வருமாறு அழைத்தேன். அவரும் வருவதற்கு சம்மதித்தார். நான் அவருக்காக காத்திருந்தேன். சாந்தி வந்தவுடன் இருவருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஆனது. ஆத்திரத்தில் நான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சாந்தியை கொலை செய்தேன்” எனக் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சம்பவடத்தில் கொலை நடந்தது எப்படி என்பதை தத்ரூபமாக போலீசாரிடம் குற்றவாளி வேல்முருகன் நடித்து காட்டினார்.பின்னர் கண்ணமங்கலம் காவல்நிலையத்திற்கு குற்றவாளியை அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து அவனிமிருந்து 12 கிராம் தங்க நகை கொலைக்கு பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : மோகன்ராஜ் ( ஆரணி)
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.