கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைகளை மூடி ஒத்துழைப்பு வழங்கிய வியாபாரிகள்: வெறிச்சோடிய முக்கிய வீதிகள்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைகளை மூடி ஒத்துழைப்பு வழங்கிய வியாபாரிகள்: வெறிச்சோடிய முக்கிய வீதிகள்!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு திருவண்ணாமலை நகராட்சியில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மாலை 5 மணியுடன் கடைகளை மூடி வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

 • Share this:
  திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் கடந்த சனிக்கிழமையன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மற்றும் திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  அந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கொரோனா கட்டுப்படுத்தும் விதமாக திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள அனைத்து கடைகளையும் வருகிற 16-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு மாலை 5 மணிக்கு மூட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

  அதனை ஏற்றுக்கொண்ட வியாபாரிகள் இன்று மாலை 5 மணியுடன் திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் மளிகை கடை, காய்கறி மார்க்கெட், டீக்கடை, சூப்பர்மார்க்கெட், நகைக்கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் இன்று மாலை 5 மணியுடன் தங்கள் வணிகத்தை முடித்துக் கொண்டு கடையை மூடி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் காவல்துறை சார்பில் 5 மணியுடன் கடையை மூட வேண்டும் என ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பு செய்தனர்.

  5 மணியுடன் கடைகள் அடைக்கப்பட்டதால் திருவண்ணாமலையில் அதிக கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளான பெரிய கடை வீதி, கடலை சந்திப்பு, அசலியம்மன் கோவில் தெரு, திருவூடல் தெரு உள்ளிட்ட பல்வேறு வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

  செய்தியாளர் - சதிஷ்
  Published by:Esakki Raja
  First published: