Home /News /tamil-nadu /

ராஜ்பவன் ஆர்.எஸ்.எஸ். அலுவலகமாக மாறி வருகிறது - கி. வீரமணி குற்றச்சாட்டு

ராஜ்பவன் ஆர்.எஸ்.எஸ். அலுவலகமாக மாறி வருகிறது - கி. வீரமணி குற்றச்சாட்டு

கி. வீரமணி

கி. வீரமணி

K Veeramani : தமிழகத்தில் பாஜக எவ்வளவு கரணம் போட்டாலும் வெளியே வர முடியாது என்று கூறியுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் தற்பொழுது ஆர்.எஸ்.எஸ். அலுவலகமாக மாறி வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகியவற்றை முன்வைத்து திராவிடர் கழகம் சார்பில் கடந்த 3ஆம் தேதி நாகர்கோவில் தொடங்கி வருகின்ற 25ம் தேதி சென்னையில் நிறைவடைய உள்ள  பரப்புரை கூட்டம் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அபோது அவர்பேசுகையில், இந்தியாவில் ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே கல்விக்கொள்கை, ஒரே தேர்தல் என்று கூறி வரும் பாஜக ஒரே சாதி என்று கூற முடியுமா என்று கேள்வி எழுப்பினார். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் அனைத்தும் வெளிப்படையாக செய்கிறார்கள் என்றும், தமிழகத்தில் பாஜக எவ்வளவு கரணம் போட்டாலும் வெளியே வர முடியாது என்று விமர்சித்தவர்.

    பாஜக குத்தகைக்கு போனதால் மட்டுமே 4 இடத்தில் வெற்றி பெற்றதாகவும், இது தொடர்பாக அனைத்து தேர்தல் முடிவுகள் கூறும் என்றும் கூறிய வீரமணி, திமுக என்பது வெற்றிடம் இல்லை என்றும் தமிழ்நாட்டில் அனைவரும் கற்றுக் கொள்ளக் கூடிய கற்றிடம் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.  மேலும், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், தமிழ் வருடப் பிறப்பில் வருகின்ற 60 வருடங்களில் ஏதேனும் ஒரு தமிழ் வருடம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பிய வீரமணி, இன்று (நேற்று) ராஜ்பவனில் நடைபெற்ற விருந்து என்பது வழக்கத்திற்கு மாறாக நடைபெற்ற விருந்து என்றும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழகத்தில் உள்ள ராஜ்பவன் அலுவலகம் தற்பொழுது ஆர்.எஸ்.எஸ். அலுவலமாக மாறிக் கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

    உலகம் பார்த்து வியக்கும் அளவிற்கு தமிழக முதல்வர் ஆட்சி நடத்தி வருவதாகவும் இதனை பாஜக குறுக்குசால் ஓட்டி பார்த்தால் மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்று எச்சரித்த அவர் மக்களுக்கு தெளிவு ஏற்படுத்துவதற்காக தான் இந்த சுற்றுப் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

    Must Read : கறிசோறு கொஞ்சம் காரம் - நரிக்குறவர் மாணவி வீட்டில் உணவு சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்

    இந்த நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் - அ.சதிஷ், திருவண்ணாமலை
    Published by:Suresh V
    First published:

    Tags: Dravidar Kazhagam, K.Veeramani, RSS, Thiruvannamalai

    அடுத்த செய்தி