• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை : பக்தர்கள் ஏமாற்றம்

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை : பக்தர்கள் ஏமாற்றம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம் என அறிவிப்பு.

  • Share this:
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும், இதனை கருத்தில் கொண்டு பவுர்ணமி நாளில் திருவண்ணாமலை மலைச்சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    கொரோனா தொற்று பரவல் குறைந்ததாலும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்றும், நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று, வழிபாட்டு தலங்களுக்கு வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு, தமிழக அரசு கடந்த 15 ஆம் தேதி முதல் தளர்வுகள் அளித்து உத்தரவிட்டது.

    திருவண்ணாமலை மாவட்டம் அருணாசலேஸ்வரர் கோவில் அருகே உள்ள மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம்செல்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் வருவது வழக்கம்.

    இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. நோய் தொற்று பரவல் குறைவு காரணமாக வழிபாட்டு தலங்களுக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு கடந்த 15ஆம் தேதி முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது.

    இதனால், இந்த மாதத்துக்கான பவுர்ணமி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.56 மணிக்கு தொடங்கி மறுநாள் (புதன்கிழமை) இரவு 8.54 மணிக்கு நிறைவடைகிறது. இந்நிலையில், திருவண்ணாமலையில் 19 ஆவது மாதமாக இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். இதனை கருத்தில் கொண்டு பவுர்ணமி தினம் (இன்று) காலை 6 மணி முதல் 21 ஆம் தேதி இரவு 12 மணிவரை திருவண்ணாமலை மலைச்சுற்றும் பாதையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் தொற்று பரவலை தடுக்கும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் இல்லை என்ற நிலையை அடைய அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Must Read : இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள் குறித்த தகவல்கள்...

    இந்த அறிவிப்பால் கிரிவலம் செல்லவிரும்பிய பக்தர்கள் மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அடைந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: