முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் - மகிழ்ச்சியில் 1 டன் தக்காளியை மக்களுக்கு அள்ளிக்கொடுத்த வியாபாரி

ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் - மகிழ்ச்சியில் 1 டன் தக்காளியை மக்களுக்கு அள்ளிக்கொடுத்த வியாபாரி

தக்காளியை அள்ளிக்கொடுத்த வியாபாரி

தக்காளியை அள்ளிக்கொடுத்த வியாபாரி

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வாங்கியதை கொண்டாடும் வகையில் வியாபாரி ஒருவர் மக்களுக்கு தக்காளியை இலவசமாக வழங்கியுள்ளார்.

தக்காளி விலை சொல்லுங்கன்னா தங்கம் விலை சொல்றீங்க.. மார்க்கெட் பக்கம் போன கண்டிப்பா இந்த வார்த்தைகள் காதில் விழும். உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளும் தக்காளி விலை சமயத்தில் தங்கம் விலை ஏறுவதுபோல் ஏறும்.திருவண்ணாமலையை சேர்ந்த வியாபாரி ஒருவர் ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வாங்கியதை கொண்டாடும் வகையில் தங்கமான தக்காளி பொதுமக்களுக்கு  இலவசமாக அள்ளிக்கொடுத்துள்ளார்.

Also Read:  Ration card | லஞ்சம் இல்லாமல் ரேஷன் கார்டு பெற முடியாது.. 300 ரூபாய் முதல் 3000 வரை செலவாகிறது - ஸ்மார்ட்டா கல்லா கட்டும் அரசு அதிகாரிகள்.. புலம்பும் சாமானியர்கள்

தக்காளி

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் தொடங்கியது. 17 நாள்கள் நடந்த ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் நிறைவுப்பெற்றது. இந்தப்போட்டியில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப்பதக்கத்துடன் 48-வது இடத்தை பிடித்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். இதனைக் கொண்டாடும் விதமாக வந்தவாசியை சேர்ந்த காய்கறி வியாபாரி வாடிக்கையாளர்களுக்கு தக்காளி இலவசமாக அள்ளிக்கொடுத்துள்ளார்.

திருவண்ணாமலை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலக சாலையில் காய்கறி கடை நடந்தி வருபவர் சேட்டான். இவர் ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வென்றதை கொண்டாடும் விதமாக நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) தனது காய்கறி கடைக்கு காய்கறி வாங்க வந்தவர்களுக்கு தலா 2 கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார். இவர் சுமார் 500 பேருக்கும் தலா 2 கிலோ தக்காளிகளை இலவசமாக வழங்கினார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Gold, Tokyo, Tokyo Olympics, Tomato