Home /News /tamil-nadu /

பருவத மலையில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை.. அழுகிய நிலையில் சடலம் மீட்பு - போலீஸ் விசாரணை

பருவத மலையில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை.. அழுகிய நிலையில் சடலம் மீட்பு - போலீஸ் விசாரணை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Tiruvannamalai : பருவதமலை மலைமீது கள்ள காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பருவத மலையில் 3 ஆயிரம் அடி உயரத்தில்  கள்ளக்காதல் ஜோடி தற்கொலை அழுகிய நிலையில் சடலத்தை மீட்ட காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில் அருகாமையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பருவதமலை மலை உள்ளது. 4,500 அடி உயரம் கொண்ட மலையில் தினந்தோறும் பக்தர்கள் மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக சென்னையை சேர்ந்த பக்தர்கள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு பருவதமலை ஏறும் வழியில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் அடி உயரத்தில் துர்நாற்றம் வீசுவதாக பக்தர்கள் கொடுத்த தகவலின் பேரில் நேற்று இரவு கடலாடி போலீசார் மலையேறும் குழுவினருடன் ஏரி ஆய்வு செய்தனர்.

    அப்போது 3 ஆயிரம் அடி உயரத்தில் ஆண் பெண் இருவர் தனித்தனியாக மரத்தில் தூக்கிட்ட நிலையில் உடல் முழுவதும் அழுகி துர்நாற்றம் வீசிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இருவரது உடலையும் ஆய்வு செய்த பொழுது அவர்களிடம் ஆதார் கார்டு மற்றும் பணம் உள்ளிட்டவைகள் இருந்தன.இதனைத் தொடர்ந்து இரண்டு உடல்களையும் கைப்பற்றி மலையிலிருந்து அடிவாரத்திற்கு கொண்டுவந்து பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்காதல் ஜோடி :

    காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் மாதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் மகன் ராஜசேகர் (வயது 43) இவர் சொந்தமாக பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. தனது பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்க்க வந்த காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகள் தேவி (வயது 29) என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் ஆகாத தேவியை திருமணம் செய்துகொண்டு இரண்டாவது மனைவியாக ஆக்கிக் கொண்டு உள்ளார்.

    Also Read: டிஜே பார்ட்டி.. டான்ஸ் எல்லாம் காரணமில்லை - மாப்பிள்ளை மாறிய விவகாரத்தில் நடந்தது என்ன?

    தேவியன் தந்தை அன்பழகன் தனது மகளை காணவில்லை என பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்து தேவி மற்றும் ராஜசேகரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் கள்ளக்காதல் ஜோடி பருவத மலைக்கு வந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் இருவரும் தனித்தனியே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

    Also Read: மதுபோதையில் அண்ணனின் கழுத்தை அறுத்த தம்பி கைது

    இதனைத் தொடர்ந்து தேவியின் உறவினர்கள் மற்றும் ராஜசேகரின் உறவினர்களுக்கு கடலாடி போலீசார் தகவல் தெரிவித்து அவர்கள் இருவரும் இறந்து போன தேவி மற்றும் ராஜசேகரின் உடலை அடையாளம் காட்டுவதற்காக வரவழைத்துள்ளனர்.
    இரு குடும்பத்தாரின் எதிர்ப்பால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முடிவு எடுத்து உள்ளதா அல்லது வேறு ஏதாவது காரணங்களால் என பல கோணங்களில் இறந்து போன கள்ளக்காதல் ஜோடி உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: சதீஷ் ( திருவண்ணாமலை)

    _____________________________________________________________________

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Commit suicide, Crime | குற்றச் செய்திகள், Death, Illegal affair, Tamil News, Thiruvannamalai

    அடுத்த செய்தி