முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கண்களைக் கட்டிக் கொண்டு மகளிர் தினத்தில் சாதனை : அசத்திய அரசுப் பள்ளி மாணவி!

கண்களைக் கட்டிக் கொண்டு மகளிர் தினத்தில் சாதனை : அசத்திய அரசுப் பள்ளி மாணவி!

கண்ணைக் கட்டிக் கொண்டு சாதனை

கண்ணைக் கட்டிக் கொண்டு சாதனை

Government School Student suruthi : பெண்களால் எல்லாம் முடியும் என்பதற்கு எடுத்துகாட்டாக கண்களைக் கட்டி கொண்டு 2 நிமிடங்களில் 106 தேங்காயை உடைத்து அரசுப் பள்ளி மாணவி சுருதி மகளிர் தினத்தில் அசத்தி, பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மூனுகபட்டு கிராமத்தை சேர்ந்த கூலி நெசவு தொழிலாளி குமரன் அனிதா தம்பதியினருக்கு சுருதி (13) காஞ்சனா (10) என்ற 2 மகள்கள் உள்ளனர். ஸ்ருதி அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு பயின்று வருகின்றார். மாணவி ஸ்ருதி உலக சாதனை செய்ய ஆர்வம் கொண்டவராக இருந்து வந்துள்ளார். இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணை துணியால் கட்டி கொண்டு சுமார் 36 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் இயக்கி அனைவரின் பாராட்டையும் பெற்று கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர்.

இதனையொடுத்து, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களால் எல்லாம் சாதிக்க முடியும் என்ற உணர்வை பெண்கள் மத்தியில் கொண்டு செல்ல புதிய முயற்சியாக கண்ணை துணியால் கட்டி கொண்டு தனது சகோதரியை படுக்க வைத்து சுற்றி தேங்காயை உடைக்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டார்.

அதன்படி, ஆரணி அருகே மூனுகபட்டு கிராமத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் 8ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ருதி தனது சகோதரியை படுக்க வைத்து சுற்றி தேங்காயை வைத்து தனது கண்ணை துணியால் கட்டி சுத்தியல் மூலம் 2 நிமிடங்களில் 106 தேங்காயை உடைத்து புதிய உலக சாதனை நிகழ்த்தினார். இந்த சாதனையை பீனிக்ஸ் புக் ஆஃப் வேல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனம் பதிவு செய்தது.

மாணவி சுருதி

மேலும் ஏற்கனவே கண்ணை கட்டி கொண்டு 50 தேங்காயை 1 நிமிடத்தில் உடைத்தாக இருந்த சாதனையை அரசு பள்ளி மாணவி ஸ்ருதி 2 நிமிடத்தில் 106 தேங்காயை உடைத்து புதிய சாதனை மைல்கல் எட்டியுள்ளார். இந்நிலையில், பீனிக்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தில் இடம் பதிந்து விருது வழங்கபட உள்ளதாக புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளன.

Must Read : அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம்.. பாதுகாப்பு கோரி பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் மனு..

இதனையொடுத்து  மாணவர்கள் கைதட்டி ஆரவரத்துடன் வாழ்த்து தெரிவித்தும் தலைமையாசிரியை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் கேடயம் வழங்கியும் மாணவி ஸ்ருதியை கௌரவபடுத்தினார்கள்.

செய்தியாளர் : ம.மோகன்ராஜ், ஆரணி.

First published:

Tags: Government school, School student, Tiruvannamalai, Women's Day