• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பேருந்துக்கு காத்திருந்த மூதாட்டி.. குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நகையை கொள்ளையடித்த கும்பல்

பேருந்துக்கு காத்திருந்த மூதாட்டி.. குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நகையை கொள்ளையடித்த கும்பல்

மூதாட்டியை ஏமாற்றிய நபர்கள்

மூதாட்டியை ஏமாற்றிய நபர்கள்

மூதாட்டிக்கு குளிர்பானத்தில் மயக்க மருத்து கொடுத்து தங்க நகை கொள்ளை 3 நபர்கள் கைது

  • Share this:
    வந்தவாசியில் 60 வயது மூதாட்டிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 6 சவரன் தங்க நகை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி திண்டிவனம் சாலை அண்ணா நகரை பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு. இவர் கடந்த 25ஆம் தேதி வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே மேல்மருவத்தூர் மருத்துவமனைக்கு செல்வதற்காக பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த காரில் மூன்று நபர்கள் அலமேலு விடும் ஆசை வார்த்தை கூறி மேல்மருவத்தூருக்கு செல்கிறோம் என்று கூறி அலமேலுவை காரில் அழைத்துச் சென்றனர். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து அலமேலு கொடுத்துள்ளனர்.

    Also Read: ராங்கால் பழக்கம்.. காதல் மோகத்தால் கர்ப்பம் தரித்த இளம்பெண் - கைவிரித்த காதலன்

    குளிர்பானத்தை அருந்திய அலமேலு சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்துள்ளார். பின்னர் அவரிடம் இருந்த 6 சவரன் தாலி சரடு, கம்மல் உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்துக்கொண்டு மயங்கிய நிலையில் இருந்த அலமேலுவை திருவள்ளுவர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சாலையில் விட்டுவிட்டுச் சென்றனர். பின்னர் இரண்டு நாள் பிறகு மயக்கம் தெளிந்த அலமேலு பெரிய பாளையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததன் பேரில் அலமேலுவின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அலமேலுவின் கணவர் சக்கரவர்த்தி வந்தவாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான கார் என்னை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இன்று காலை வந்தவாசி மும்முனி புறவழி சாலை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது சிசிடிவி கேமராவில் பதிவான கார் வந்துள்ளது.

    Also Read: வகுப்பில் பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் முன்பு நடனம் ஆடி அட்டகாசம் - சேட்டை மாணவர்களுக்கு டிசி கொடுத்த ராசிபுரம் அரசுப் பள்ளி

    போலீசார் அந்த காரை  மடக்கிப் பிடித்து விசாரணை செய்தபோது காரில் இந்த மூன்று நபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். பின்னர் அவர்களை வந்தவாசி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், அவருடைய தந்தை வாசுதேவன், உறவினரான சாரதா ஆகிய மூன்று பேர்கள் அலமேலுவை காரில் அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தங்க நகைகளை கொள்ளையடித்தது ஒப்புக்கொண்டனர். மேலும் இவர்கள் 3 பேரும் இதேபோல் பல பேரிடம் கொள்ளையடித்தும் பல குற்ற வழக்குகள் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேர்களை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 6 சவரன் தங்க நகை மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இவர்கள் 3 பேரும் காரில் டிப்டாப்பாக குடும்பமாக சென்று 50 வயது முதல் 60 வயது வரை உள்ள மூதாட்டிகளை மட்டும் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றதாக கூறியுள்ளனர்.

    செய்தியாளர் ம.மோகன்ராஜ் (ஆரணி )

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: