• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • போலியான வலம்புரி சங்கு.. கோடிகளில் நடக்கவிருந்த மோசடி - அலர்ட்டான போலீஸ் சிக்கிய இடைத்தரகர்கள்

போலியான வலம்புரி சங்கு.. கோடிகளில் நடக்கவிருந்த மோசடி - அலர்ட்டான போலீஸ் சிக்கிய இடைத்தரகர்கள்

மோசடி கும்பல்

மோசடி கும்பல்

காவல்துறை நடத்திய விசாரணையில் போலியான வலம்புரி சங்கை 2 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்ய முயன்றதாக தகவல்

  • Share this:
    போலியான வலம்புரி சங்கை  பல கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலின் 14 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப்பாதையில் சித்தர்களும் ஞானிகளும் அமர்ந்து தியானம் செய்ததாக வரலாறு உண்டு. சித்தர்களும் ஞானிகளும் வாழ்ந்த கிரிவல பாதையில் மாதம் மாதம் பௌர்ணமி அன்றும் சாதாரண நாட்களிலும் பல ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வது வழக்கம். இப்படிப்பட்ட கிரிவலப் பாதையில் அவப்பெயரை உண்டாக்கும் வகையில் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள சாய்பாபா ஆசிரமத்தில் தங்களது சுயலாபத்திற்காக பல கோடி மதிப்புள்ள போலி வலம்புரி சங்கு வியாபாரம் செய்வதற்காக 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று கூடியுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    Also Read: காதல் திருமணம் செய்த மகள்.. என் பொண்ண இறக்கிவிட்டு போங்க.. போலீஸ் ஜீப் முன்பு படுத்து போராடிய பெற்றோர்

    அதன் அடிப்படையில் போலீசார் சாய்பாபா ஆசிரமத்திற்கு சென்று பார்த்தபோது போலியான வலம்புரி சங்கை வைத்து பல பேரிடம் வியாபாரம் மேற்கொண்டது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கிருந்த ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்,

    கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடைக்காடர் சித்தர் ஆசிரமத்தை நடத்தி வரும் கோவிந்தராஜ் என்பவர் தலைமையில் பண்ருட்டியை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் போலி வலம்புரி சங்கை வியாபாரம் செய்வதற்காக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சாய்பாபா ஆசிரமத்திற்கு வந்துள்ளார், அப்போது கீழ்பெண்ணாத்தூர் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் உமாசங்கர், ராணிப்பேட்டையை சேர்ந்த சதீஷ், செஞ்சியை சேர்ந்த குப்பன், திருவண்ணாமலை பெரிய தெரு பகுதியை சேர்ந்த அஸ்வத்தாமன், பாண்டிச்சேரியை சேர்ந்த ராஜேஷ், தேனியைச் சேர்ந்த நாகராஜ் ஆகிய எட்டுபேர் கொண்ட இடைத்தரகர்கள் ஒன்றுகூடி வியாபாரம் செய்ய முயன்றுள்ளனர்.

    Also Read:  எம்.ஜி.ஆர்., ஸ்டாலின் வழியில் 'திராவிட நடிகர்' உதயநிதி.. புகழ்ந்து தள்ளிய எ.வ.வேலு

    அப்போது காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை நகர காவல் துணை கண்காணிப்பாளர் கிரண்சுருதி ஐபிஎஸ் தலைமையில் கிராமிய காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வியாபாரத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யும்போது பண்ருட்டியை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் மட்டும் தப்பி ஓடியுள்ளார், மற்ற ஏழு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து போலி வலம்புரி சங்கு மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் போலி வலம்புரி சங்கில் அரிசி மேல்நோக்கி தள்ளுவதற்காக வலம்புரி சங்கில் சிறிய அளவிலான பேட்டரி பொருத்தி உள்ளதாகவும், வலம்புரி சங்கில் பாலை ஊற்றினால் தயிராக மாறுவதற்கு வலம்புரி சங்கில் கெமிக்கல் சேர்ப்பதாக போன்றும் செயல் விளக்கம் காட்டி வியாபாரிகளிடம் சங்கை விற்க முயன்றது தெரிய வந்துள்ளது.மேலும் இந்த கும்பல் வேறு எந்தெந்த மோசடியில் ஈடுபட்டு உள்ளது என்றும் தமிழகத்தில் வேறு எங்காவது இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்றும் பல கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

    செய்தியாளர் : அ.சதிஷ் (திருவண்ணாமலை)



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: