Home /News /tamil-nadu /

வீட்டில் சடலமாக கிடந்த மகள்.. காப்புக்காட்டில் தந்தை மர்ம மரணம் - திருவண்ணாமலையில் அதிர்ச்சி

வீட்டில் சடலமாக கிடந்த மகள்.. காப்புக்காட்டில் தந்தை மர்ம மரணம் - திருவண்ணாமலையில் அதிர்ச்சி

திருவண்ணாமலை தற்கொலை சம்பவம்

திருவண்ணாமலை தற்கொலை சம்பவம்

Thiruvannamalai | தந்தை மகள் மரணத்துக்கு காரணம் தேடி தீவிர விசாரனையில் காவல்துறையினர்.

    திருவண்ணாமலையில்  மகள் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் மாயமான தந்தை காப்புக்காட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    திருவண்ணாமலை அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தை சோந்தவர் சிவபாலன். இவரது மனைவி ரம்பா. இவர்களுக்கு 11ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மகளும், சரன்செல்வா என்ற 7ம் வகுப்பு பயிலும் மகனும் உள்ளனர். சிவபாலன் சே.கூடலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.

    Also Read : சென்னைவாசிகளே உஷார்.. விலையுயர்ந்த பைக்குகளை டார்க்கெட் செய்யும் கொள்ளையர்கள்

    இந்நிலையில் கடந்த 8-ம் தேதி இரவு சிவபாலனின் மகள் தேவிப்பிரியா வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த தாயார் ரம்பா இதுகுறித்து தச்சம்பட்டு காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் முதல் தந்தை சிவபாலன் வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தச்சம்பட்டு காவல்துறையினர் இறந்த மாணவி தேவிப்பிரியாவின் உடலை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.

    இறந்த மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்து உறவினர்களிடம் கொடுத்துள்ளனர். மாணவியின் உடல் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மணலூர் பேட்டை சாலையில் உள்ள கண்ணமடை காட்டில் தந்தை சிவபாலன் இரண்டு கை மணிக்கட்டு, கழுத்து அறுத்த நிலையிலும், விஷம் அருந்தியும் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

    Also Read: மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கு.. தேடப்படும் நபருக்கு பதிலாக சரணடைந்த மற்றொரு நபர் - போலீஸ் விசாரணை

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மனைவி ரம்பா தச்சம்பட்டு காவல் நிலையத்தில் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் இறந்த ஆசிரியர் சிவபாலன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அடுத்தடுத்து மகள் மற்றும் தந்தை தற்கொலை செய்து கொண்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

    மகள் மற்றும் தந்தை தற்கொலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் மாணவி இறந்தது முதல் அவரது தந்தை சிவபாலன் காணாமல் போனார். இந்நிலையில் ஆசிரியர் சிவபாலன் மர்மமான முறையில் கைகளில் ரத்த காயங்களுடன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்துபோன சிவபாலன் மனைவி உள்ளிட்டவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை  செய்து வருகின்றனர்.

    செய்தியாளர்: சதீஷ் (திருவண்ணாமலை)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Commit suicide, Crime News, Death, Murder, Thiruvannamalai

    அடுத்த செய்தி