• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Bharani Deepam : திருவண்ணாமலையில் அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

Bharani Deepam : திருவண்ணாமலையில் அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

பரணி தீபம் ஏற்றப்பட்டது

பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கருவறையில் முன்பு அதிகாலை 3.50 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

  • Share this:
    திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளான இன்று அதிகாலை 3.50 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. 10ஆம் நாளான இன்று, அண்ணாமலையார் கருவறையில் முன்பு அதிகாலை 3.50 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனத் தொடர்ந்து 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    தீபத் திருவிழாவின் நிறைவு நாளான இன்று மாலை திருக்கோவில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீப மலையின் மீது இன்று மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு, நேற்று தீபக் கொப்பரைக்கு, சிறிய நந்தி சந்நதிக்கு முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் ஊழியர்கள் 15 பேர் மூலமாக 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியின் மீது மகாதீப கொப்பரையை தோளில் சுமந்தபடி கொண்டு செல்லப்பட்டது.

    5.9 அடி உயரமும், 250 கிலோ எடையும் கொண்ட இந்த மகா தீப கொப்பரையானது பஞ்சலோகத்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று அடுக்குகளாக செய்யப்பட்டது. மகாதீப கொப்பரையில் ஆன்மீக பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்படும் 3,500 லிட்டர் நெய் மற்றும் 1000 மீட்டர் காடா துணிகளைப் பயன்படுத்தி இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    சிவனும் சக்தியும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று மாலை காட்சி அளித்த பின்பு சரியாக மாலை 6 மணிக்கு இந்த மகா தீபக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும்.

    இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் என 20 ஆயிரம் பக்தர்களை மட்டுமே கிரிவலத்திற்கு அனுமதிக்க முடியும் என்றும், அவர்கள் மலை மீது ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நவம்பர் 18, 19, 20 தேதிகளில் கட்டளைதாரர்களுக்கு மட்டும் கோவிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே தீபத்திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் ஆய்வு செய்து பக்தர்களை அனுமதிப்பர்கள்.

    Must Read : திருவண்ணாமலை தீபத் திருவிழா: 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி- தமிழக அரசு

    கட்டளைதாரர்கள், பக்தர்கள் என அனைவருமே கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: