Home /News /tamil-nadu /

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் நூதன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் நூதன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் போராட்டம்

பெட்ரோல் போராட்டம்

Tiruvanamalai Congress Protest | சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சிலிண்டர்களுக்கு பட்டை நாமம் போட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் சிலிண்டர்களுக்கு பட்டை நாமம் போட்டும், மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கழுத்தில் பெட்ரோல், டீசல், பாட்டில்களை மாலையாக அணிந்தும், சைக்கிளில் வந்து  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ALSO READ |  வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை மீண்டும் நிறைவேற்றுங்கள்- தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
 ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

 

செய்தியாளர் : ம.மோகன்ராஜ்
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Congress, Petrol, Tiruvanamalai

அடுத்த செய்தி