Home /News /tamil-nadu /

முகூர்த்த தினத்தையொட்டி பொருட்கள் வாங்க திருவண்ணாமலை முக்கிய கடைவீதிகளில் குவிந்த மக்கள் கூட்டம்!

முகூர்த்த தினத்தையொட்டி பொருட்கள் வாங்க திருவண்ணாமலை முக்கிய கடைவீதிகளில் குவிந்த மக்கள் கூட்டம்!

முகூர்த்த தினத்தையொட்டி பொருட்கள் வாங்க திருவண்ணாமலை முக்கிய கடைவீதிகளில் குவிந்த மக்கள் கூட்டம்!

முகூர்த்த தினத்தையொட்டி பொருட்கள் வாங்க திருவண்ணாமலை முக்கிய கடைவீதிகளில் குவிந்த மக்கள் கூட்டம்!

ஆவணி மாத வளர்பிறை முகூர்த்த தினத்தையொட்டி பொருட்கள் வாங்க திருவண்ணாமலை முக்கிய கடைவீதிகளில் மக்கள் கூட்டம் குவிந்தது. ஒரே நேரத்தில் பொதுமக்கள் குவிந்ததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.

    திருவண்ணாமலை நகரில் கடந்த வாரத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 16ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு மாலை 5 மணிக்கு மேல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளைய தினம் ஆவணி மாத வளர்பிறையில் வரக்கூடிய சுப முகூர்த்தம் என்பதால் திருமணத்திற்கு தேவையான நகை, துணி வகைகள், காய்கறிகள், மளிகை பொருட்கள் என வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் திருவண்ணாமலையில் முக்கிய வீதியான தேரடி வீதி, கடலைக் கடை சந்திப்பு, காந்தி சிலை, தேரடி வீதி, காய்கறி மார்க்கெட் போன்ற பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    Also read: சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

    மேலும் போக்குவரத்து காவல்துறையினர் இதுபோன்று சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் திருவிழா காலங்களில் பேருந்துகள் நகரின் மையப்பகுதிக்கு வந்து செல்லாமல் மாற்று பாதையில் திருப்பி விடுவது வழக்கம். ஆனால் போக்குவரத்து காவல்துறையினர் இன்றைய தினம் பேருந்துகளை மாற்றுப்பாதையில் திருப்பி விடாததால் காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வாகன ஓட்டிகள் நடந்து செல்பவர்கள் என போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர். மேலும் 5 மணிக்கு மேல் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பொருட்கள் வாங்க நகரின் முக்கிய பகுதி வருகை புரிந்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருவண்ணாமலையை பொருத்தவரை இன்றைய தினம் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறந்தது என்றே கூற வேண்டும்.

    செய்தியாளர்  - சதீஷ்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19

    அடுத்த செய்தி