Home /News /tamil-nadu /

தகராறு செய்த மாணவர்களை அரசு மருத்துவமனையில் வேலை செய்ய சொன்ன நீதிபதி

தகராறு செய்த மாணவர்களை அரசு மருத்துவமனையில் வேலை செய்ய சொன்ன நீதிபதி

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    தகராறு வழக்கில் தொடர்புடைய 6 சிறுவர்கள் செங்கம் அரசு மருத்துவமனையில் ஒரு மாதம் பணியாற்ற வேண்டுமென்று நூதன தண்டனை விதித்து திருவண்ணாமலை சிறார் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

    கடந்த 2015-ல் செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் வீரானந்தல் பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 6 பேர் அங்கு வந்தனர். இருதரப்ப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில் 3 காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய 6 பேர் மீது புதுப்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்தனர்.



    திருவண்ணாமலை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு நீதிபதி விக்னேஷ் பிரபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் தாக்குதல் நடத்திய 6 சிறுவர்களும் செங்கம் அரசு செங்கம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் கூறும் பணியை செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 19-ம் தேதிவரை ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து பிற நாள்களில்  காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

    அதன் பேரில் செங்கம் அரசு தலைமை மருத்துவர் ராமநாதன் அறிவுறுத்தலின்படி, அரசு மருத்துவமனையை சுற்றியுள்ள முள் புதர்களை வெட்டி அகற்றும் பணியில் 6 பேரும் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
    Published by:Saroja
    First published:

    Tags: Judgement, Students

    அடுத்த செய்தி