Chitra Pournami : சித்ரா பௌர்ணமிக்கு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலை

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

    சிவபெருமானின் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

    இந்நிலையில், 14 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையை கொண்ட திருவண்ணாமலை, மலையில் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த நாட்களில் பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவர். அதிலும், சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமில், தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வர்.

    இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி ஏப்ரல் 26ஆம் தேதி (நாளை) வருகிறது. இந்நிலையில், வேகமாக பரவி வரும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த வருடம் சித்ரா பௌர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் வர வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவகின்றது. இதனால், தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து ஞாயிறு கிழமைகளில் முழுநாள் ஊரடங்கும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கும் அமல்படுத்தப் பட்டுள்ளது.



    Must Read : இலங்கையில் அதிக சக்தி வாய்ந்ததாக உருமாறிய கொரோனா வைரஸ்: 3ஆவது அலை எச்சரிக்கை

     

    இந்நிலையல், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் சித்ரா பௌர்ண அயன்று, 26ஆம் தேதி திங்கள்கிழமை முதல், 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை சித்ரா பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் எனவும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உரிய ஒத்துழைப்பை பொதுமக்கள் நல்கிட வேண்டும் எனவும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டுள்ளார்.
    Published by:Suresh V
    First published: