Home /News /tamil-nadu /

பஸ் எடுக்கமுடியாது.. பாதிவழியில் பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் - சிறைபிடித்த மாணவர்கள்

பஸ் எடுக்கமுடியாது.. பாதிவழியில் பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் - சிறைபிடித்த மாணவர்கள்

அரசுப்பேருந்து

அரசுப்பேருந்து

ஆரணியில் அரசுப் பேருந்து ஓட்டுனரை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அரசு பேருந்தில் கல்லூரிக்கு மாணவர்கள் அதிக அளவில் சென்றதால் ஓட்டுநர் பேருந்தை பாதியில் நிறுத்திய சம்பவம் ஆரணியில் நடந்துள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அரசு கலைக்கல்லூரி இல்லாத காரணத்தால் செய்யாறில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரிக்கு மாணவர்கள் பேருந்தில் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. தினந்தோறும் ஆரணி, படவேடு, களம்பூர், கண்ணமங்கலம் பகுதிகளிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் செய்யாறு அரசு கல்லூரிக்கு பேருந்தில் பயணம் செய்வது வழக்கமாகும். தினந்தோறும் காலை வகுப்பு மற்றும் மதிய வகுப்பு என இரண்டு வேளைகளிலும் சுமார் 250 மாணவ மாணவிகள் ஆரணியில் இருந்து செய்யாற்றில் உள்ள அரசு கல்லூரிக்கு அரசு பேருந்தில் சென்று வருவது வழக்கம்.

    4 பேருந்தில் செல்லும் அளவுக்கு மாணவர்கள் கூட்டம் இருந்தாலும் ஆரணியில் இருந்து செய்யாறு வழித்தடத்தில் இரண்டு பேருந்துகள் மட்டுமே செல்கின்றது. இதனால் மாணவ மாணவிகள் ஒரு பேருந்தில் 100 முதல் 150 மாணவ மாணவிகள் வரை செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. ஆரணியில் இருந்து செய்யாறுக்கு ஆபத்தான நிலையில் மாணவ மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று ஆரணியில் இருந்து செய்யாறு சென்ற அரசு பேருந்தில் மாணவ மாணவிகள் 150க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததால் இரும்பேடு கிராமம் அருகே ஓட்டுநர் பேருந்தை இயக்காமல்  பாதியிலேயே நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மாணவ மாணவிகள் பேருந்தை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் மாணவர்களிடம் சமரசம் செய்து போராட்டத்தை கைவிடுமாறு கூறி மாணவர்களிடமிருந்து பேருந்தை விடுவித்தனர்.  ஆரணியில் இருந்து செய்யாறு கலைக் கல்லூரிக்கு படிக்க செல்லும் மாணவ மாணவிகளுக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

     செய்தியாளர்: ம.மோகன்ராஜ் (ஆரணி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Govt Bus, Protest, Students, Tamil News

    அடுத்த செய்தி