Home /News /tamil-nadu /

மூட்டைக்கு 30 ரூபாய்.. நெல் கொள்முதலுக்கு லஞ்சம் வாங்கிய பொறுப்பாளர் கைது

மூட்டைக்கு 30 ரூபாய்.. நெல் கொள்முதலுக்கு லஞ்சம் வாங்கிய பொறுப்பாளர் கைது

ஏழுமலை

ஏழுமலை

திருவண்ணாமலை மாவட்டம் நாடழகானந்தல் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நிலைய பொறுப்பாளராகவும் பட்டியல் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார் ஏழுமலை.

  • News18
  • Last Updated :
    நெல் கொள்முதல் செய்ய, 3570 ரூபாய் லஞ்சம் வாங்கிய நேரடி நெல் கொள்முதல் நிலைய பொறுப்பாளரை லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் நாடழகானந்தல் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நிலைய பொறுப்பாளராகவும் பட்டியல் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார் ஏழுமலை. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த காட்டுமலையனூர் ஊராட்சியை சேர்ந்த பெருமாள் என்பவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலையத்தில் நெல் பயிரிட்டு அறுவடை முடிந்தவுடன் கடந்த 2 ஆம்தேதி 40 கிலோ எடை கொண்ட 119 முட்டைகளை நாடழகானந்தல் கிராமத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

    100 கிலோ கொண்ட ஒரு நெல் மூட்டைக்கு 2015 ரூபாய் கொள்முதல் நிலைய பொறுப்பாளர் ஏழுமலை விலை நிர்ணயம் செய்து 94,915 ரூபாய் என கூறியுள்ளார். இதனையடுத்து ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் என விவசாயி பெருமாளிடம் ஏழுமலை லஞ்சமாக கேட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி மீண்டும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்ற பெருமாளிடம் நிலைய பொறுப்பாளர் ஏழுமலை கட்டாயமாக மூட்டைக்கு 30 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டுமென கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.

    Also read... அரிசிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் - பிரபல ரவுடி கைது

    இந்நிலையில் லஞ்சம் கொடுக்க மனமில்லாத பெருமாள் திருவண்ணாமலையில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் கொடுத்துள்ளார். அவர்களின் அறிவுரைப்படி இன்று பிற்பகல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்ற விவசாயி பெருமாள் ஒரு மூட்டைக்கு 30 ரூபாய் வீதம் கணக்கீட்டு ரசாயனம் தடவிய ரூ 3570 ரூபாய் கொடுத்தபொழுது லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான ஆய்வாளர் பிரபு கோபிநாத் முருகன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குழுவினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலேயே வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    -செய்தியாளர்: சதிஷ்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Thiruvannamalai

    அடுத்த செய்தி