ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் ஊராட்சி செயலாளர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது!

மாதிரிப் படம்

தகவலின் அடிப்படையில் இந்திராவிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஸ்ரீதேவியிடம் அனுப்பியுள்ளனர்.

 • Share this:
  ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளருக்கு நிலுவைத் தொகையை வழங்க ரூ.5000 லஞ்சம் வாங்கிய பெண் ஊராட்சி செலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காயம்பட்டு ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதேவி. அதே ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் இந்திரா தனது 2017 முதல் 2020 வரை 32 மாதத்திற்கான சம்பள நிலுவைத் தொகை ரூபாய் 24,940 வழங்கவேண்டுமென ஊராட்சி செயலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் இதற்கு 5 ஆயிரம் பணம் கொடுத்தால் தான் கையெழுத்திட்டு காசோலை வழங்கப்படும் என கூறியுள்ளார். இந்த நிலையில் தன்னிடம் உள்ள 2,000 ரூபாய் மட்டும் தருகிறேன் என தூய்மைப் பணியாளர் இந்திரா தெரிவித்துள்ளார். அதற்கு ஒப்புகொள்ளாத ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேவையான பணம் கொடுத்தால் மட்டுமே தங்களின் நிலுவைத்தொகை மனு ஆவண செய்யப்படும் இல்லையென்றால் உடனடியாக செய்ய முடியாது என கூறியுள்ளார்.

  இதனைத் தொடர்ந்து இந்திரா திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.  தகவலின் அடிப்படையில் இந்திராவிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஸ்ரீதேவியிடம் அனுப்பியுள்ளனர்.

  Also read: தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை மத்திய அரசு வழங்கினால் 3வது அலையை எளிதில் கட்டுப்படுத்த முடியும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  அப்பொழுது தனது வீட்டில் இருப்பதாகவும் வீட்டிற்கு ரூபாய் ஐந்தாயிரம் எடுத்து வர வேண்டும் என தெரிவித்ததைத் தொடர்ந்து அருள்பிரசாத், அன்பழகன் யுவராஜ், மைதிலி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு குழுவினர் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து ஸ்ரீதேவி மீது வழக்குப்பதிவு செய்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

  செய்தியாளர் - அ.சதிஷ்
  Published by:Esakki Raja
  First published: