• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆரணி அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்; வழிவிட மறுத்த வாகன ஓட்டிகள்!

ஆரணி அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்; வழிவிட மறுத்த வாகன ஓட்டிகள்!

ஆரணி

ஆரணி

கண்ணமங்கலம் பேரூராட்சியில் அனைத்து ஜவுளிக்கடை மற்றும் பேக்கரி எலக்ட்ரிக் கடைகள் என அனைத்து கடைகளும் ஷெட்டரை மூடி விட்டு வியாபாரம் செய்து வருகின்றனர்.

  • Share this:
    ஆரணி அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸூக்கு கூட வழிவிடாமல் அப்பகுதி மக்கள் கடைவீதிகளில் கூட்டம் கூட்டமாக கூடி காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்கிச்செல்கின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றி வட்டார பகுதியில் இன்றும், நாளையும் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையில் மளிகைக் கடைகள் இயங்கலாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில், ஆரணி பஜார் கண்ணமங்கல பேரூராட்சி உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றன.

    காவல்துறையினர், வட்டாட்சியர் அலுவலர்கள், கண்ணமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலர்கள், ஆரணி நகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் தொற்று பரவும் அச்சத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட தயக்கம் காட்டுவதால் சாலையோர வியாபாரிகள், சிறிய வணிகர்கள் தடுப்பு நடவடிக்கைகளை காற்றில் பறக்கவிட்டு வியாபரத்தில் மும்முரம் காட்டி வருகின்றனர். மக்களும் முக கவசங்களை அணியாமல், சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்காமல் சாலையில் சுற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று மாலை திருவண்ணாமலையில் இருந்து வேலூருக்கு கண்ணமங்கலம் வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸ் கண்ணமங்கல பஜார் வீதியில் நெரிசலில் சிக்கி தவித்தது. வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விட முடியாத படி அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. அதன் பின்னர் சிறிது நேர போராட்டத்திற்கு பின்பு ஆம்புலன்ஸ் வாகனம் அந்த பகுதியை கடந்து சென்றது.

    மேலும் கண்ணமங்கலம் பேரூராட்சியில் அனைத்து ஜவுளிக்கடை மற்றும் பேக்கரி எலக்ட்ரிக் கடைகள் என அனைத்து கடைகளும் ஷெட்டரை மூடி விட்டு வியாபாரம் செய்து வருகின்றனர். இது சம்மந்தமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய் துறையிடம் புகார் அளித்தாலும் இதுவரையில் எந்த ஓரு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர்.

    ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவில் கொரோனா தொற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: