ஊரடங்கில் சாலையில் சுற்றிய இளைஞர்கள் - ஆரணி போலீஸார் கொடுத்த நூதன தண்டனை

ஆரணி

ஊரடங்கு காலத்தில் காரணமின்றி சுற்றி திரிந்த 15 வாகனங்களை பறிமுதல் செய்து தலா 200வீதம் போலீசார் அபராதம் விதித்தனர்.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டுமே  அனுமதியளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரம் மட்டுமே அந்த கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் ஊரடங்கை பொருட்படுத்தாமல் சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு திருவண்ணாமலை காவல்துறையினர் தூதன முறையில் தண்டனை வழங்கி வருகின்றனர்.

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில்  காலை 10.00மணி வரையில் மளிகை கடை, பால் கடை, மற்றும் முக்கிய அத்தியவாச பொருட்கள் விற்பனை செய்ய மட்டும் கடைகள் திறந்து மற்ற கடைகள் அடைக்கபட்டிருக்க வேண்டும்  என அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளன.

  Also Read: தெலங்கானா லேடி கான்ஸ்டபிளின் காதல் லீலைகள் -காதல் ராணியாக வலம் வந்த சந்தியா ராணி

  ஊரடங்கை பொருட்படுத்தாமல் ஆரணி காந்தி ரோடு, மார்க்கெட் வீதி, சத்திய மூர்த்தி ஆகிய சாலைகளில் காலை 10 மணிக்கு மேல் வாகன ஓட்டிகள் அதிகளவில் சுற்றி திரிக்கின்றனர். பல முறை போலீசார் எச்சரித்தும் வாகன ஓட்டிகள் அதிகளவில் சாலைகளில் சுற்றி திரிக்கின்றனர்.

  இந்நிலையில் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர் சிலை அருகில் ஆரணி டி.எஸ்.பி கோட்டிஸ்வரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு உத்தரவை மதிக்காமல் சாலைகளில் சுற்றி திரிந்த 4 இளைஞர்கள் போலீசார் பிடித்து தோப்பு கரணம் போட வைத்து இனி மேல் சாலைகளில் சுற்றி திரிய மாட்டோம் என உறுதி மொழி ஏற்க வைத்து நூதன முறையில் தண்டனை அளித்தனர்.பின்னர் காரணமின்றி சுற்றி திரிந்த 15 வாகனங்களை பறிமுதல் செய்து தலா 200வீதம் போலீசார் அபராதம் விதித்தனர்.

  ஆரணி செய்தியாளர்: மோகன்ராஜ்

   
  Published by:Ramprasath H
  First published: