ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காதலியை பெண் கேட்டதால் பெண்ணின் தந்தை தாக்குதல்... சோகத்தில் இளைஞர் தற்கொலை - திருவண்ணாமலையில் பரபரப்பு

காதலியை பெண் கேட்டதால் பெண்ணின் தந்தை தாக்குதல்... சோகத்தில் இளைஞர் தற்கொலை - திருவண்ணாமலையில் பரபரப்பு

தற்கொலை செய்து கொண்ட இளைஞர் சாம்ராஜ்.

தற்கொலை செய்து கொண்ட இளைஞர் சாம்ராஜ்.

Tiruvanamalai | நேற்று காலையில் சாம்ராஜ் மற்றும் அவனுடைய நண்பர்கள் முருகேஷ், சந்தோஷ் ஆகிய 2 நண்பர்களுடன் ஈஸ்வரி வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Arani (Arni), India

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காதலியை பெண் கேட்டு வீட்டிற்கு சென்ற வாலிபரை காதலி தந்தை தாக்கியதால் மனமுடைந்த காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கூலிதொழிலாளி ஏழுமலை - செல்வராணி தம்பதியினருக்கு, 2 மகன் 1 மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் சாம்ராஜ் (21) சென்னை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார்.

  மேலும் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் - அஞ்சலை தம்பதியினருக்கு 2 மகள் 1மகன் உள்ளனர். தம்பதியினரின் மூத்த மகள்  ஈஸ்வரி (17), களம்பூர் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக சாம்ராஜ் ஈஸ்வரி ஆகியோர் காதலித்து வருகின்றனர்.

  குழந்தைக்கு அவசர சிகிச்சை.. மின்னல் வேகத்தில் 8 ஆம்புலன்ஸ்! சினிமாவை மிஞ்சிய ரியல் சம்பவம்!

  இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்ததால் காதலுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து ஈஸ்வரியை தனது உறவினருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யபட்டு வந்தனர். இதனால் ஈஸ்வரி சாம்ராஜின் உறவை துண்டித்து பேச்சு வார்த்தை அடியோடு நிறுத்திவிட்டார்.

  நேற்று காலையில் சாம்ராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் முருகேஷ், சந்தோஷ் ஆகிய 2 நண்பர்களுடன் ஈஸ்வரி வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். அப்போது ஈஸ்வரி ‘உன்னிடம் பேச விரும்பவில்லை. எனது உறவினர் விஜய் என்பவரை திருமணம் செய்து கொள்வதாக’ சாம்ராஜிடம் தெரிவித்ததன் பேரில், சாம்ராஜ் ஈஸ்வரி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்றது.  இதில்ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை வெங்கடேசன் சாம்ராஜை கடுமையாக தாக்கியுள்ளார்.

  5 ஓட்டுகள் பெற்ற விரக்தியில் அமமுக வேட்பாளர் தற்கொலை முயற்சி.. விளாத்திகுளத்தில் அதிர்ச்சி சம்பவம்

  பின்னர் நடந்த சம்பவத்தை சாம்ராஜ் தனது உறவினர் சம்பத் என்பவரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.

  இந்நிலையில், மனமுடைந்த சாம்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  அவரது தாய் செல்வராணி சாம்ராஜ் தூக்கிட்டு தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

  பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சாம்ராஜை மீட்டு, சிகிச்சைக்காக ஆரணி அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் ஏற்கனவே சாம்ராஜ் இறந்துவிட்டதாகமருத்துவர்கள் தெரித்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் சாம்ராஜின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

  இதனையடுத்து சாம்ராஜை தாக்கிய பெண்ணின் தந்தை வெங்கடேசனை கைது செய்யகோரி சாம்ராஜ் உறவினர்கள் களம்பூர் காவல்நிலையத்தில் முற்றுகையிட்டுபின்னர். ஆரணி. திருவண்ணாமலை சாலையில் அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  பின்னர் தகவல் அறிந்த வந்த ஆரணி காவல்துறை கண்காணிப்பாளர்  ரவிச்சந்திரன் மற்றும் களம்பூர் போலீசார் வெங்கடேசனை கைது செய்ய உறுதியளித்தன் பேரில் சாம்ராஜ் உறவினர்கள் சாலைமறியலை கைவிட்டனர். இதனால்  இப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது..

  மேலும் தலைமறைவான வெங்கடேசனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆரணி அருகே காதலி பெண் கேட்டு சென்ற காதலனுக்கு நேர்ந்த கொடூரம்இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் ம.மோகன்ராஜ், ஆரணி 


  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


  Published by:Musthak
  First published:

  Tags: Crime News, Tiruvanamalai